
புதுச்சேரி: போராடினால் தான் எதுவும் கிடைக்கும் என்று சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் புதுவை முதல்வர் நாராயணசாமி பேசியுள்ளார்.
மத்திய
அரசு மானியம் இல்லாத சமையல் எரிவாயு விலையை உயர்த்தியுள்ளதற்கு நாடு
முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உயர்த்தப்பட்ட சமையல் எரிவாயு
விலையைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியும், விலை உயர்வை கண்டித்தும்
புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
புதுச்சேரி இளைஞர்
காங்கிரஸ் தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எரிவாயு விலை
உயர்வை கண்டித்தும் அதனைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் எரிவாயு
சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது எரிவாயு சிலிண்டர் மீதான விலை உயர்வை
கண்டித்தும், அதனை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் மத்திய அரசை
கண்டித்தும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய
முதல்வர் நாராயணசாமி, மானியத்தை குறைத்து விட்டு மத்தியில் ஆட்சி செய்யும்
பாஜக பொதுமக்களை சுரண்டுவதாக குற்றம் சாட்டினார்.பொருளாதார வீழ்ச்சியை
பற்றி மக்கள் பேசக்கூடாது என்பதற்காக அதை திசை திருப்பும் முயற்சியாக
குடியுரிமை சட்டத்திருத்த விவகாரத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளதாக
தெரிவித்த அவர்,
கை சின்னத்தோடு சென்று
சோனியாகாந்தி,ராகுல்காந்தி,பிரியங்கா காந்தி ஆகியோர் படங்களுடன் சென்று
பாஜக அரசின் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட மக்களுக்கு எதிரான
செயல்பாடுகள் பற்றி கிராமப்புறங்கள் வரை கொண்டு செல்ல
வேண்டும்,புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸ் வேகம் கொண்டு
செயல்படுங்கள்,போராட்டத்தில் ஈடுபடுங்கள்.நடவடிக்கை
எடுக்கட்டும்.போராடினால் தான் எதுவும் கிடைக்கும் என பேசினார்
source: m.dailyhunt.in
No comments:
Post a Comment