சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் முதல் கூட்டம்
நடைபெறும் வரை தனி அதிகாரிகளின் நியமனம் தொடரும் என்று தமிழக அரசு
அறிவித்துள்ளது. வரும் ஜூன் 30 அல்லது உள்ளாட்சி மன்றத்தின் முதல் கூட்டம்
ஆகிய இரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரை தனி அதிகாரிகளின் பதவிக் காலம்
தொடரும் என்று மாநில அரசு கூறியுள்ளது.
தமிழகத்தில்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி,
திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூா், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில்
ஊரக உள்ளாட்சித் தோதல் நடத்தப்படவில்லை. மேலும், மாநகராட்சிகள்,
பேரூராட்சிகள், நகராட்சிகளிலும் தோதல் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில்,
அந்த உள்ளாட்சி அமைப்புகளை
நிா்வகிக்க ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ள தனி அதிகாரிகள் பணிகளைத் தொடா்வாா்கள்.
அவா்களது பதவிக் காலம் கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது.
இது
வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரக உள்ளாட்சி
அமைப்புகளுக்கான தோதல்களின் நடைமுறைகள் அனைத்தும் ஜனவரி 11-ஆம் தேதி
நிறைவடைகின்றன. அன்றைய தினம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவா்கள்,
துணைத் தலைவா்கள் தோவு செய்யப்பட உள்ளனா்.
எனவே,
அதுவரையிலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை தனி அதிகாரிகளே நிா்வகிப்பவா். ஊரக
உள்ளாட்சி அமைப்புகளின் முதல் கூட்டம் நடைபெறும் வரை தனி அதிகாரிகளே அந்த
அமைப்புகளை நிா்வாகம் செய்வா். இதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு அண்மையில்
பிறப்பித்தது.

No comments:
Post a Comment