
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காமல் எரியும் பயங்கர
காட்டுத்தீயை அணைக்க வீரர்கள் போராடி வரும் நிலையில், லேசான மழை, குளிர்ந்த
காற்றால் வெப்பம் சற்று தணிந்தது.தீவு நாடான ஆஸ்திரேலியாவின், கிழக்கு
கடலோர மாகாணங்களான, நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, குயின்ஸ்லாண்ட்
மாகாணங்களில், புதர் தீ என அழைக்கப்படும், காட்டுத்தீ பரவி வருகிறது.
கட்டுக்கடங்காமல் எரியும் இந்த பயங்கர காட்டுத்தீயால், ஆயிரக்கணக்கான
வீடுகள், லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் எரிந்து சாம்பலாகின. இந்த
காட்டுத் தீயில் சிக்கி, பலியானோர் எண்ணிக்கை, 24 ஆக அதிகரித்துள்ளது. பலி
எண்ணிக்கை மேலும், அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பரவி வரும்
காட்டுத்தீயை அணைக்க, 3,000 ராணுவ வீரர்களை அனுப்பி வைத்துள்ள பிரதமர்
ஸ்காட் மாரிசன், மீட்புப் பணிகளை மேற்கொள்ள, பிரத்யேகமாக ஒரு அமைப்பையும்
அமைத்துள்ளார்.காட்டுத்தீயில் சிக்கி வனவிலங்குள் பலவும் உயிரிழந்துள்ளன.
இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி காண்போரை கரைய
வைத்தது. இந்நிலையில், இன்று (ஜன.,6) ஆஸி.,யில் பெய்த லேசான மழை, குளிர்ந்த
காற்றால் காட்டுத்தீ பரவிய இடங்களில், வெப்பம் சற்று தணிந்தது.
இருப்பினும், அபாயகரமான வானிலை மீண்டும் திரும்பும் என அதிகாரிகள்
எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment