அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ புயல் தீவிரமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு
கிழக்கே மையம் கொண்டுள்ள ‘கஜா’ புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர
மாவட்டங்களில் மிதமானது முதல் கனமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு
மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீவிர
புயலாக மாறினாலும் கரையை கடக்கும்போது தீவிரம் குறைந்த புயலாக மாறும்
எனவும் வட கடலோர மாவட்டங்களில் 80 - 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்
எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்
பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் ஆழ்கடல் பகுதிக்கு சென்றவர்கள் நாளைக்குள்
கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் 15ம் தேதி தமிழகம்,
புதுவைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், கடலோர ஆந்திரா,
ராயல்சிமா ஆகிய பகுதிகளுக்கு தற்போது அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு
கிழக்கே 860 கி.மீ. தொலைவில் ’கஜா’ புயல் மையம் கொண்டுள்ளதாகவும்
நெல்லூரில் இருந்து 900 கி.மீ. தொலைவில் ’கஜா’ புயல் மையம்
கொண்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment