Latest News

'தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தோற்பார்கள் என தெரிந்துதான் நிறுத்தினேன்' - அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா

முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா தோல்வி அடைவார்கள் என்று தெரிந்துதான் தனது மகள் மற்றும் மகனை இந்த உள்ளாட்சித் தேர்தலில் களமிறக்கியதாகக் கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா கூறியுள்ளார்.

இதில், 2வது வார்டில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மகள் ராவியத்துல் அதபியா, திமுக சார்பில் சுப்புலட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். இரு முனை போட்டியில், பதிவான வாக்குகளில் சுப்புலட்சுமி 2,405 வாக்குகளும, ராவியத்துல் அதபியா 1,062 வாக்குகளும் கிடைத்தன.

அதே போல் 16வது வார்டில் போட்டியிட்ட இவரது மகன் நாசர் அலி, திமுக வேட்பாளர் தவ்பீக் அலியிடம் 983 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் 21 வார்டுகள் உள்ளன. 

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழக தொழிலாளர் துறை முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, "குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இஸ்லாமிய சமுதாய மக்களை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்கின்ற உணர்வு ஒவ்வொரு இஸ்லாமிய வாக்காளரிடமும் இருக்கிறது. இதை என்னால் கண்கூடாக பார்க்க முடிந்தது," என்று கூறினார்.

"இந்த சட்டத்தை ஆதரிப்பவர்களை நாம் எதிர்க்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவில் வாழ முடியும் என்ற அச்சம், தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர் மத்தியில் இருப்பதனால் அவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தார்கள்," என்றார்.

ராவியத்துல் அதபியா 
''முஸ்லிம்கள் அதிகமாக வாழக்கூடிய என்னுடைய சொந்த கிராமம் மற்றும் அருகே உள்ள வேதாளை ஆகிய இரண்டு கிராமங்களில் என்னுடைய பிள்ளைகளை நிறுத்தியிருந்தேன் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தும் போர்க் களத்திற்குச் செல்லும் வீரனைப் போல எங்களுடைய குடும்பத்திலிருந்து இரண்டு பேரை களமிறக்கினேன். தோற்றாலும் பரவாயில்லை அதை மகிழ்ச்சியோடு நாம் ஏற்றுக்கொள்வோம் என்று நான் எடுத்த முடிவின் காரணமாக இந்த தோல்வி எனக்கு ஏற்பட்டது.''

''நான் நிறுத்திய அந்த இடத்தில் மட்டும் அல்லாமல் வேறு பல இடங்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்விக்கு சிறுபான்மையினர் மக்கள் வாக்கு வங்கி நமக்கு எதிராகவே அமைந்தது.''

''குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்து இருந்தாலும் என்.சி.ஆர்-ஐ நாடு முழுவதும் அமல்படுத்த கூடாது என்று நிதிஷ் குமார், பினராயி விஜயன், ஒடிசாவின் முதலமைச்சர் நவீன் பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி போன்ற முதலமைச்சர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்ததால் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஆதரவளித்த முதலமைச்சர்கள் எல்லாம் என்.சிஆர்-ஐ நாங்கள் அமல்படுத்த மாட்டோம் என்பதைப்போல அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். ''

''அப்படி ஒரு முடிவை எடுத்தால் மட்டுமே இழந்த சிறுபான்மையினரின் வாக்குகளை நம்மால் திரும்பப் பெற முடியும் என்ற என் கருத்தை கட்சியின் தலைமைக்கு தெரிவித்துள்ளேன் அதை கட்சியின் தலைவர்கள் பரிசீலிப்பார்கள் என நம்புகிறேன், '' என்றார் அன்வர் ராஜா.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சுப்புலட்சுமி, "பிரசாரத்தின் போது, அதிமுக அரசு மீது மக்களின் அதிருப்தி தெரிந்தது. வெற்றி பெறுவோம் என நம்பினோம். ஆனால், இவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வோம் என நினைக்கவில்லை," என்றார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.