
பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சர்ச்சைக்குரிய வகையில்
விமர்சித்து பேசியதாக கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணனை ஒரு வழியாக சேலம்
சிறையில் அடைத்துள்ளனர்.
நெல்லை மேலப்பாளையத்தில் இந்திய குடியுரிமை
திருத்த சட்டத்தினை கண்டித்து இஸ்லாமிய அமைப்பு சார்பில் கண்டன கூட்டம்
நடத்தப்பட்டது. இதில், கலந்து கொண்டு பேசிய மேடை பேச்சாளர் மற்றும்
பட்டிமன்ற நடுவரான நெல்லை கண்ணன்,பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர்
அமித்ஷா ஆகியோருக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து
பாஜகவினர் அளித்த புகாரின் பேரில், அவர் மீது, கலவரம் ஏற்படும் வகையில்
பேசுதல், மக்களை கிளர்ந்தெழ செய்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு
பதிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவுபெரம்பலூரில் கைது செய்யப்பட்டார்.
அங்கிருந்துநெல்லை
அழைத்துவரப்பட்ட கண்ணனுக்குஅரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை
செய்யப்பட்டடது. பிறகு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நெல்லை
கண்ணன் ஆஜர்படுத்தப்பட்டார்.
நெல்லை கண்ணனை 10 நாட்கள் போலீஸ்
காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோரினர். அதே நேரத்தில், உடல்நிலையை
கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று நெல்லை கண்ணன் தரப்பில்
கோரப்பட்டது. இதையடுத்து, நீதிபதி பாபு, நெல்லை கண்ணனை வரும் வரும் 13ம்
தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, மதியம்
2 மணி அளவில் பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். ஆனால்,
அங்குஅவரை அடைக்காமல், சேலம் அழைத்துச் செல்லப்பட்டு அங்கேயுள்ள மத்திய
சிறையில் அடைக்கப்பட்டார்.
நெல்லை கண்ணன் நெஞ்சு வலி காரணமாக
சிகிச்சை பெற்று வரும் நிலையில், 24மணி நேரத்திற்குள்ளாக
பெரம்பலூரிலிருந்து, நெல்லை சுமார் 360 கி.மீ தூரமும். நெல்லையிலிருந்து,
சேலத்திற்கு, சுமார் 385 கி.மீ தூரமும் எனமொத்தம் 750 கி.மீ தூரத்திற்கு,
நெல்லை கண்ணன் சாலை மார்க்கமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளது அவரது
ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Newstm.in
No comments:
Post a Comment