
பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது பாரம்பரிய கலைகளை பாதுகாக்க உதவும்: டெரகோட்டா கலைஞர் விகே முனுசாமி
பத்மஸ்ரீ
விருது புதுச்சேரியைச் சேர்ந்த டெரகோட்டா கலைஞர் விகே முனுசாமிக்கு
அறிவிக்கப்பட்டுள்ளது. இது அழிவின் விளிம்பில் இருக்கும் கலையை இன்றைய
இளைஞர்களுக்கு கற்றுத்தரும் பணியில் ஈடுபட்டிருக்கும் என் போன்ற
கலைஞர்களுக்கு அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பத்மஸ்ரீ விருது
அறிவிக்கப்பட்ட முனுசாமி தெரிவித்துள்ளார்.
மத்திய
அரசு பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறப்பான பணிகளில் ஈடுபட்டு
இருப்பவர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகளை நேற்று அறிவித்துள்ளது. இதில் கலை
பிரிவில் புதுச்சேரி வில்லியனூர் அடுத்த கணுவாப்பேட்டையில் வசிக்கும் விகே
முனுசாமிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முனுசாமி பேசுகையில் ''அழிவின்
விழிம்பில் இருக்கும் இந்த சுடு களிமண் கலையை இன்றைய தலைமுறையினரும்
தெரிந்து கொள்ளும் வகையில் மாவட்ட தொழில் மையத்துடன் இணைந்து வேலையில்லா
பட்டதாரிகள் மற்றும் மாணவர்களுக்கு இந்த கலையை கற்றுத் தருகிறேன்.
இதன்
மூலம் இந்த கலை பாதுகாக்கப்படும். இந்தப் பணிக்காக மாநில அரசின்
பரிந்துரையின் பேரில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது என்
போன்ற கலைஞர்களுக்கு ஊக்கத்தையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது என்றும் தேசிய
விருதுகள்,யுனெஸ்கோ விருதுகள் கிடைத்திருந்தாலும் பத்மஸ்ரீ விருது
கிடைத்திருப்பது பாரம்பரிய கலைகளை பாதுகாக்க உதவும்'' என்றார் மகிழ்வுடன்.
No comments:
Post a Comment