
தேர்தல் நடைபெற உள்ள ஆண்டில் அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய
கொண்டு வரப்பட்ட தீர்மானம் மிக மிக ஆபத்தானது என்று டிரம்ப்பின்
வழக்கறிஞர்கள் செனட் சபையில் வாதாடினர். வெள்ளை மாளிகையின் சட்ட வல்லுனரான
பேட் சிப்போலோன் இக்குழுவுக்குத் தலைமை வகித்தார். அதிபர் டிரம்ப்பை
குற்றம் புரிந்ததாக கூறி இப்போது பதவியை விட்டு நீக்குவது முறையற்றது
என்றும், மக்களின் வாக்குரிமையைப் பறிக்கக் கூடாது என்றும் அவர்
வாதாடினார்.
தேர்தலுக்கு பத்து
மாதங்களே உள்ள நிலையில் ஜனநாயகக் கட்சியினர் தேர்தலுக்கு மிகப்பெரிய
இடையூறு ஏற்படுத்துகின்றனர் என்று டிரம்ப்பின் வழக்கறிஞர்கள் வாதாடினர்.
அரசியல் சட்டத்தை மீறும் இச்செயலை அனுமதிக்கக்கூடாது என்று அவர்கள்
வலியுறுத்தினர்.
செனட் சபையில் டிரம்ப்புக்கு மூன்றில் இரண்டு பங்கு
உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் அவர் இந்த வழக்கில்இருந்து
விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment