


இந்திய அரசியல் சட்டத்திலும் கூட பட்ஜெட் என்ற சொல்லுக்கு பதிலாக அரசின் ஆண்டு நிதி அறிக்கை என்ற பதமே இருக்கிறது.
ஆனாலும், நமது இந்திய அரசின் ஆண்டுக்கான வரவு செலவு திட்டங்களைக் கணக்கிடுவதால் பட்ஜெட் என்று சொல்கிறோம்.
அரசியல்
சட்டப்பிரிவு 112ன் படி, நமது நாட்டின் ஆண்டு வரவு செலவு கணக்கு
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். மேலும் ஆண்டின் நிதிநிலை
அறிக்கையை தாக்கல் செய்ய நாட்டின் முதல் குடிமகன் என அழைக்கப்படும்
குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற வேண்டும். அதன் பிறகு தான் நிதிநிலை
அறிக்கையைத் தாக்கல் செய்ய முடியும். இந்த பட்ஜெட்டை மத்திய அளவில் மட்டும்
அல்லாது, மாநில அளவிலும் தாக்கல் செய்வார்கள். மத்தியில் பட்ஜெட் தாக்கல்
செய்வதற்கு குடியரசு தலைவரிடம் அனுமதி பெறுவது போல் மாநிலங்களில் பட்ஜெட்
தாக்கல் செய்வதற்கு அந்த மாநிலத்தின் ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டும்.
newstm.in
No comments:
Post a Comment