
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் வரும் பிப்ரவரி 1ம் தேதி தொடங்க
உள்ளது. நிதியமைச்சகத்தால் உருவாக்கப்படும் இந்த பட்ஜெட்டானது,
அரசாங்கத்தின் வரவு, செலவு மதிப்பீட்டிற்கான அறிக்கையை சமர்ப்பிப்பதாகும்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரண்டாவது பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம்
தேதி தாக்கல் செய்ய உள்ளார். இந்தியா சுதந்திரத்திற்கு பின் யாரெல்லாம்
இதுவரை நிதித்துறை அமைச்சராக இருந்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர் என்பதனை
பார்ப்போம்.
இந்தியா சுதந்திரத்திற்கு
பின் 1947ம் ஆண்டு ஜவகர்லால் நேரு பிரதமரானதும், இந்திய அரசின் முதல்
நிதியமைச்சரானவர் ஆர். கே. சண்முகம் செட்டியார். இவர் இந்திய
நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பல பெருமைகளை உடையவர்.
1947முதல் 1949ம் ஆண்டு வரை இவர் பதவியில் இருந்தார்.
இவரை
தொடர்ந்து ஜான் மத்தாய், சி.டி. தேஷ்முக், டி.டி. கிரிஷ்ணமாச்சாரி,
ஜவகர்லால் நேரு போன்றோர் 1949 முதல் 1958வரை சிறிய கால இடைவெளியில்
நிதியமைச்சராக பதவி வகித்தனர்.
1958
முதல் 1963வரை ஜவகர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் நிதி
அமைச்சராக மொரார்ஜி தேசாய் பதவி வகித்தார். இந்தியாவின் இரண்டாவது பிரதமராக
லால் பகதூர் சாஸ்திரி ஆட்சி செய்த காலத்தில் மீண்டும் 1967 முதல் 1969 வரை
நிதி அமைச்சராக இருந்தார். பின்னர் இவரே ஜனதா கட்சியின் உறுப்பினராகி,
1979ல் இந்திய பிரதமராக இருந்தார்.
இந்தியன்
நேஷனல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான இந்திரா காந்தி பிரதமரானதும்,
அக்கட்சியின் நிதியமைச்சராக 1980 முதல் 1982 வரை ஆர்.வெங்கட்ராமன், 1982 -
1984 வரை பிரணாப் முகர்ஜி ஆகியோர் நிதித்துறை அமைச்சராக பதவி வகித்தனர்.
இந்திரா காந்தி மறைவை தொடர்ந்து, ராஜிவ் காந்தி பிரதம மந்திரி ஆனதை தொடர்ந்து 1984 - 1987வரை வி.பி. சிங் நிதியமைச்சராக இருந்தார்.
நரசிம்ம
ராவ் இந்தியன் நேஷனல் காங்கிரஸ் கட்சியின் பிரதமராக பதவி வகித்த 5ஆண்டுகள்
(1991 -1996) முழுவதும் மன்மோகன் சிங் அக்கட்சியின் நிதியமைச்சராக
செயல்பட்டார்.
பின்னர் 1996ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின்
முதல்வராக அடல் பிஹாரி வாஜ்பாய் செயல்பட்டார். அப்போது நிதி அமைச்சராக
பட்ஜெட் தாக்கல் செய்தவர் ஜஷ்வந்த் சிங்.
மீண்டும்
ஆட்சி மாற்றத்தால் 1997ம் ஆண்டு தேவ கவுடா தலைமையிலான தமிழ் மாநில
காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அப்போது நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம்.
தேவ கவுடாவை தொடர்ந்து ஐ.கே.குஜரால் பிரதம மந்திரியாக 1997 - 1998வரை செயல்பட்டார். அவரே நிதித்துறையையும் கவனித்து கொண்டார்.
2002ம்
ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை மீண்டும் பாரதிய ஜனதா கட்சியின் முதல்வராக
அடல் பிஹாரி வாஜ்பாய் செயல்பட்டார். அப்போது நிதி அமைச்சராகஇருந்தவர்கள்
ஜஸ்வந்த் சிங், யஸ்வந்த் சின்ஹா.
2008
முதல் 2014 வரை மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.
அப்போது நிதி அமைச்சர்களாக இருந்தவர்கள் ப.சிதம்பரம், மன்மோகன் சிங்,
பிரணாப் முகர்ஜி ஆகியோர்.
2014ம்
ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும்
அதன் நிதித்துறை அமைச்சராக செயல்பட்ட அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல்
செய்திருந்தார். 2016 வரையில் மூன்று முறை அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல்
செய்திருந்தார்.
அதன்
பிறகு மீண்டும் நரேந்திரமோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை
கைப்பற்றியதும், மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார்.
கடந்த
வருடம் முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வாய்ப்பு நிர்மலா
சீதாராமனுக்கு கிட்டியது. இந்த பிப்ரவரி 1ம் தேதி அவர் இரண்டாவது முறையாக
பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார்.
newstm.in
No comments:
Post a Comment