
கொழும்பு: சீனாவில் இருந்து வந்த மாணவர்களுக்கு மருத்துவ
பரிசோதனை... சீனா- வுஹானில் இருந்து இன்று (சனிக்கிழமை) நாட்டை வந்தடைந்த
33 மாணவர்களும் தியத்தலாவை இராணுவ முகாமை தற்போது சென்றடைந்துள்ளனர்.
ஶ்ரீலங்கன்
விமான சேவைக்கு சொந்தமான சிறப்பு விமானம் ஊடாக குறித்த மாணவர்கள் சீனாவின்
வுஹான் நகரில் இருந்து மத்தல விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து மத்தல விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு மாணவர்கள் அனைவரும் உட்படுத்தப்பட்டிருந்தனர்.
குறித்த பரிசோதனையை தொடர்ந்து அனைத்து மாணவர்களும், தியத்தலாவை இராணுவ
முகாமில் அமைக்கப்பட்டுள்ள 32 அறைகளுடன் கூடிய வைத்திய முகாமுக்கு பேருந்து
ஊடாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதேவேளை குறித்த
மாணவர்களை, முறையாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதன் பின்னரே
விடுவிக்க தீர்மானித்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment