
கேரள சபரிமலைக் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும்
அனுமதிக்கும் விவகாரத்தில் 9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன
அமர்வு ஜனவரி 13-ம் தேதி முதல் விசாரணை நடத்தவிருக்கிறது.
இதோடு
முஸ்லிம் மற்றும் பார்சி பெண்களுக்கு எதிரான பாகுபாடு விவகாரம் குறித்த
மனுக்களுக்கும் இதே நாட்களில் விசாரிக்கப்படவுள்ளது. 2018-ல் உச்ச
நீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட
வேண்டும் என்ற வரலாற்று உத்தரவைப் பிறப்பித்தது. இதனையடுத்து கடும்
சிக்கல்கள், வாக்குவாதங்கள், போலீஸ் நடவடிக்கைகள் நிகழ்ந்தன.
இந்நிலையில்
இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் 2018 உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு
எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ததையடுத்து உச்ச நீதிமன்றம் வழக்குகள்
பட்டியலை வெளியிடும் நோட்டீஸ் அளித்தது.
கடந்த நவம்பர் 14-ம் தேதி மூன்றுக்கு 2 என்ற
பெரும்பான்மையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன் அமர்வு 7 நீதிபதிகள்
கொண்ட அமர்வுக்கு வழக்கு விசாரணையை மாற்றி உத்தரவிட்டது.
பெண்களை அனுமதிக்கும் விவகாரம் சபரிமலை கோயிலுக்கு மட்டுமே சம்பந்தப்பட்டதில்லை என்று இந்த அமர்வு கூறியது.
ஆகவே
இந்த விவகாரத்தில் 'சாரம்சமான முழுநிறைவு நீதி' கிடைக்க நீதிக்கொள்கை
ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment