
மங்களூரு: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக மங்களூருவில்
போராட்டம் நடத்தியவர்களைக் கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூடு
நடத்தியுள்ளனர். மேலும் 6 காவல்நிலைய எல்லைப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு
அமல்படுத்தப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக
நாடு முழுவதும் கிளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தலைநகர் டெல்லியில்
தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேற்கு வங்கம்,
தமிழகம், உத்தரப்பிரதேசம், கேரளா, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவிலும்
போராட்டங்கள் வெடித்துள்ளன. கர்நாடகாவில் போராட்டங்களை தடை செய்யும்
வகையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
ஆனாலும் இத்தடை உத்தரவை மீறி பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் இன்று போராட்டம் நடைபெற்றது.
மங்களூருவில் நடைபெற்ற போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது.
இதனையடுத்து
பண்டாரு காவல் நிலைய பகுதியில் போலீசார் துப்பாக்கிச் சூடு
நடத்தியுள்ளனர். இதில் 6 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 3 பேர் மிகவும்
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இப்போராட்டங்களால் மங்களூருவில் 6 காவல்நிலைய எல்லைப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment