Latest News

இனிமேல் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு "அந்த" சலுகை கிடையாது.! அதிரடி அறிவிப்பு.!

அதாவது டேட்டா ரோல்ஓவர் வசதி என்பது முந்தைய பில்லிங் சுழற்சியில் இருந்து பயன்படுத்தப்படாத டேட்டாவை தற்போது பில்லிங் சுழற்சிக்கு அனுப்ப அனுமதிக்கும்.However, the facility is still valid for postpaid customers across the country.
தொடர்ந்து டெலிகாம் நிறுவனங்கள் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும், அதன்படி ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் அதன் டேட்டா ரோல்ஓவர் வசதியை கைவிட்டதாக அறிவித்துள்ளது.
ஏர்டெல் வி-ஃபைபர் வாடிக்கையாளர்கள்
குறிப்பாக ஏர்டெல் வி-ஃபைபர் வாடிக்கையாளர்கள் தங்களது முந்தைய பில்லிங் சுழற்சியில் இருந்து பயன்படுத்தப்படாத
டேட்டாவை இனிமேல் பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாத தொடக்கத்தில் இந்த வசதியை ஏர்டெல் நிறுவனம் நீக்கியதாக தெரிகிறது.
எக்ஸ்ட்ரீம் ஃபைபர்
மேலும் ஏர்டெல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் சேவையை இப்போது எக்ஸ்ட்ரீம் ஃபைபர் என மறுபெயரிட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இப்போது தெரிவிக்கப்பட்டுள்ள இந்த தகவல் ஏர்டெல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் பக்கத்திலும் பிரதிபலிக்கிறது. அங்கே கொடுக்கப்பட்டடுள்ள தகவலின் அடிப்படையில் எந்தவொரு பிராட்பேண்ட் திட்டங்களின் கீழும், டேட்டா ரோல் ஓவர் செய்வதற்கான வசதி பற்றி குறிப்பிடப்படவில்லை.
வாட்ஸ் ஆப்: ஒரே நேரத்தில் பல சாதனங்களில் வாட்ஸ் ஆப் சாட் செய்யலாம்!
டேட்டா ரோல்ஓவர் வசதி
அதாவது டேட்டா ரோல்ஓவர் வசதி என்பது முந்தைய பில்லிங் சுழற்சியில் இருந்து பயன்படுத்தப்படாத டேட்டாவை தற்போது
பில்லிங் சுழற்சிக்கு அனுப்ப அனுமதிக்கும். ஆனால் இனிமேல் இது நிகழாது என்றும், குறிப்பிட்ட பிராட்பேண்ட் திட்டத்தின் டேட்டா நன்மை தீர்ந்தவுடன் கூடுதலாக எந்தவொரு டேட்டா நன்மையும் அனுபவிக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.
ரூ.299 + வரி
இந்த டேட்டா ரோல் ஓவர் கைவிடப்பட்டாலும், ஏர்டெல் நிறுவனம் சத்திமில்லாமல் Get unlimited data எனும் விருப்பத்தை அதன் பிராட்பேண்ட் திட்டங்களுடன் இணைத்துள்ளது. அதாவது வரம்பற்ற டேட்டா அணுகலுக்காக இந்நிறுவனம் தனது பயனர்களிடமிருந்து ரூ.299 + வரி என்கிற கட்டணத்தை வசூலிக்கிறது. இந்த ரூ.299 என்பது உங்கள் அடிப்படை திட்டத்துடன் சேரத்து நீங்கள் கொடுக்கவேண்டிய தொகை ஆகும்.
வரம்பற்ற டேட்டா கிடைக்கும்
உதரணமாக நீங்கள் தற்போது ஏர்டெல் நிறுவனத்தின் பேசிக் பிராட்பேண்ட் திட்டமான ரூ.799-ஐ தேர்வு செய்தால், ஒரு பில்லிங் சுழற்சிக்கு நீங்கள் 150ஜிபி அளவிலான டேட்டாவை பெறமுடியும். ஒருவேளை உங்களுக்கு கூடுதல் டேட்டா தேவைப்படும் என்றால் உங்களின் பேசிக் திட்டத்திற்கு மேல் ரூ.299-ஐ கொடுத்து ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு வரம்பற்ற டேட்டா கிடைக்கும். இதற்குவேண்டி நீங்கள் மொத்தம் ரூ.1098+ வரிகளை செலுத்த வேண்டியிருக்கும்.

வாட்ஸ் ஆப்: ஒரே நேரத்தில் பல சாதனங்களில் வாட்ஸ் ஆப் சாட் செய்யலாம்!

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.