
கும்பகோணத்தை அடுத்த பாபநாசம் அருகே 3 கல்வி மாவட்ட அளவிலான
சைக்கிள் போட்டி நடைபெற்றது இப்போட்டியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்
கலந்து கொண்டனர்.
கும்பகோணத்தை அடுத்த பாபநாசம் அருகே
அய்யம்பேட்டையில் வருவாய் மாவட்ட அளவில் மாணவ மாணவிகளிடையே விரைவு சைக்கிள்
ஓட்டும் பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் 3 கல்வி மாவட்டம் மற்றும் 15
மேற்பட்ட பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
வழுத்தூர்
சவ்கத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் அப்துல் மஜீது
மற்றும் அய்யம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கரிகால் சோழன் போட்டியை துவங்கி
வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேன்மதி முன்னிலை வகித்தார்.
மேலும் பதினாங்கு, பதினேழு, பத்தொன்பது வயது ஆண்கள்
பிரிவில் வழுத்தூர் சவ்கத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்
பெண்களிள் பதினான்கு வயது பிரிவில் உமையாள்புரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
மாணவியும், பதினேழு வயது பெண்கள் பிரிவில் கும்பகோணம் மேல்நிலைப்பள்ளியின்
மாணவிகளுயும் முதலிடத்தை பிடித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் உடற்கல்வி
ஆசிரியர் பேசுகையில், அரசின் சார்பில் நடத்தப்படும் இந்த விரைவு சைக்கிள்
போட்டியில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை பிடிக்கும் மாணவ-மாணவிகள் மாநில
அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெறுவார்கள், என்று தஞ்சாவூர்,
பட்டுக்கோட்டை, கும்பகோணம் உட்பட பல பகுதிகளிலிருந்து இந்த போட்டியில்
கலந்து கொள்வதற்காக மாணவ மாணவிகள் வந்துள்ளதாகவும் கூறினார்.
இந்த
நிகழ்ச்சியில் அய்யம்பேட்டை கபேரியல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை
ஆசிரியை, காவல் உதவி ஆய்வாளர் அருண்ராஜ் உடற்கல்வி ஆசிரியர் இஸ்மாயில்
உட்பட ஏராளமான மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகளிடையே
நடைபெற்ற விரைவு சைக்கிள் போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
newstm.in
No comments:
Post a Comment