சென்னை: அதிகாரிகள் பட்டியல் வழங்கல்... உள்ளாட்சித் தேர்தலில்
பணியாற்றவுள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பட்டியலை மாநில தேர்தல்
ஆணையத்திடம் சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது.
தமிழகத்தில்
உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று
வருகின்றன. இதற்காக, தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள்
அமைக்கப்படவுள்ளன.
சென்னையில்
5,200 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றது. சென்னை மாநகராட்சிக்கு
தேர்தல் நடத்தும் அதிகாரியாக மாநகராட்சி ஆணையர், உதவி தேர்தல் நடத்தும்
அதிகாரிகள் 37 பேர் மற்றும் தேர்தல் பணியாளர்கள் 40 ஆயிரம் பேர் கொண்ட
பட்டியல் தயாரிக்கப்பட்டு மாநில தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment