சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாகி உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில்
புதிதாக கள்ளக்குறிச்சி, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,
செங்கல்பட்டு என ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த
மாவட்டங்களின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டு புதன்கிழமை அரசாணை
வெளியிடப்பட்டது,
இதையடுத்து தமிழக ஐந்து மாவட்டத்திற்கு மாவட்ட காவல்துறை கண்பாணிப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
அவர்களின் விவரம் பின்வருமாறு
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாக டி.ஜெயச்சந்திரன் நியமனம்
தென்காசி மாவட்ட எஸ்.பி.யாக சுகுணா சிங் நியமனம்
ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாக மயில்வாகனன் நியமனம்
திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக விஜயகுமார் நியமனம்
செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.யாக கண்ணன் நியமனம்
No comments:
Post a Comment