சென்னை: சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற
தமிழகத்தின் இளவேனில் வாலறிவனுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
சீனாவின்
புடியன் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச்சுடும் போட்டிகளின் 10 மீட்டர் ஏர்
ரைபிள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ள இந்திய வீராங்கனை இளவேனில்
வாலறிவனுக்கு பாராட்டுகள். 3 மாதங்களில் உலக அளவில் இரண்டாவது
தங்கப்பதக்கம் வென்றுள்ள அவர் மேலும் பல சாதனைகளை நிகழ்த்த வாழ்த்துகள்!
புடியன்
உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டிகளின் மூன்றாவது நாளான இன்று
இந்தியாவின் இளவேனில், மனு, திவ்யான்ஷ் ஆகியோர் 3 தங்கப்பதக்கங்களை வென்று
சாதனை படைத்துள்ளனர்.
பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் சாதனைகள் தொடரட்டும்!
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment