வேலூர்: குழந்தை அழுதுட்டே இருக்கவும் எரிச்சல் ஆகிவிட்டதாம்
பவித்ராவுக்கு.. அதானால் துப்பட்டாவில் குழந்தையின் வாயை பொத்தி அழுகையை
நிறுத்தி உள்ளார்.. கடைசியில் குழந்தையின் மூச்சே நின்றுவிட்டது!
வாலாஜாபேட்டை
அடுத்த திரவுபதி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் அம்மு என்கிற பவித்ரா.
22 வயதாகிறது.. கவுரி சங்கருடன் 4 வருடத்துக்கு முன்பு கல்யாணம் ஆனது.
ரம்யா
என்ற 3 வயது குழந்தையும், மௌலிகா என்ற ஒன்றரை வயது குழந்தையும் உள்ளனர்.
ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு குழந்தைகளுடன் தனியாக
வசித்து வருகிறார் பவித்ரா. காஞ்சிபுரத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை
பார்த்து வந்தார்.
மேனகாவின் அட்டகாசம்.. பகலில் காட்டு பகுதி.. ராத்திரியானா வீட்டுக்குள் அடைப்பாங்க.. மாமியார் கண்ணீர்!
ஆனால் 2 நாளாக அவர் வேலைக்கு போகாமல் வீட்டில்தான் இருந்திருக்கிறார்.
அந்நிலையில் நேற்றிரவு குழந்தை மௌலிகா அழுது கொண்டே
இருந்தாள். அதனை சமாதானம் செய்து பார்த்தும் முடியவில்லை.. இதனால் ஒரு
கட்டத்தில் எரிச்சல் அடைந்த பவித்ரா, துப்பட்டாவில் குழந்தையின் வாயை
அமுக்கி உள்ளார்.
துப்பட்டா துணி வாயில் சிக்கி குழந்தைக்கு மூச்சு
திணறல் ஏற்பட்டு, அப்படியே மயங்கி விழுந்துவிட்டது. இதை பார்த்து பயந்துபோன
பவித்ரா, குழந்தையை தூக்கிக்கொண்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு ஓடினார்.
ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.
இதுகுறித்து
வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். "குழந்தை அழுதது
எரிச்சலா இருக்கவேதான் வாயை பொத்தினேன், ஆனால் இப்படி ஆயிரும் என்று எனக்கு
தெரியாது" என்று போலீசில் கண்ணீருடன் சொன்னர் பவித்ரா. குழந்தையின் உடலை
கைப்பற்றியதுடன், பவித்ராவையும் கைது செய்துள்ளனர்.
source: oneindia.com
No comments:
Post a Comment