
மலேசியாவின் கடைசி சுமத்ரா
காண்டாமிருகம் இறந்ததாக சபா மாநிலத்தின் சுற்றுலா, கலாசாரம் சுற்றுச்சுழல்
அமைச்சர் கிறிஸ்டீனா லியூ தெரிவித்தார். பெண் காண்டாமிருகமான இமாம் நேற்று
அதிகாலை 5:35 மணியளவில் இறந்ததாக அவர் கூறினார். கடந்த சில வாரங்களாக இமாம்
நோய்வாய்பட்டு இருந்ததாக அமைச்சர் கிறிஸ்டீனா கூறினார். இமாம் 2014ஆம்
ஆண்டு காட்டில் இருந்து பிடிக்கப்பட்டது. இமாமை வனவிலங்கு பூங்காவிற்கு
கொண்டு வந்த பின்னர் அது நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்ததாக வனவிலங்கு
அதிகாரிகள் கூறினர். மலேசியாவின் கடைசி ஆண் காண்டாமிருகமான தம் (Tam)
கடந்த மே மாதம் இறந்தது.
No comments:
Post a Comment