சிறையிலிருந்து பரோலில் வெளிவந்துள்ள பேரறிவாளன் சகோதரி மகள் திருமண
விழாவில் கலந்துகொள்ள வந்த சீமானை கட்டி அணைத்து அன்பை பொழிந்த வீடியோ
சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 1991 ஆம் ஆண்டு பேரறிவாளன் உள்ளிட்ட 7
பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 28 ஆண்டுகளாகச் சிறையில்
தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தந்தை குயில் தாசனின் உடல் நிலை
மிகவும் மோசமானதால் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2
மாதங்களுக்கு பரோல் வழங்கப்பட்டு வெளியே வந்தார். இந்நிலையில், மீண்டும்
அவரது தந்தை உடல் மோசமான நிலையில் உள்ளதால் மீண்டும் 1 மாத பரோலில்
வெளிவந்துள்ளார்.
இந்நிலையில்
பேரறிவாளனின் சகோதரி அன்புமணியின் மகள் திருமண விழா கிருஷ்ணகிரியில்
நடைபெற்றது. அங்கு சீமானும் பேரறிவாளனும் வந்திருந்தனர். நிகழ்ச்சியில்
சீமானை பார்த்த பேரறிவாளன் கட்டி அணைத்து அன்பை பரிமாறி கொண்டனர். பின்னர்
மணமக்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும்போது சீமான்
பேரறிவாளனை தனது அருகில் அழைத்து தோள் மீது கைப்போடும்படி அன்பு
கட்டையிட்டதையடுத்து அவர் கைப்போட்டு நின்று போஸ் கொடுத்த வீடியோ அனைவரின்
கவனத்தை ஈர்த்துள்ளது.
No comments:
Post a Comment