சென்னை: உள்ளாட்சி அமைப்புகளின் தலைவா் பதவிகளையும் ஜனநாயக
முறைப்படி வாக்காளா்களால் தோந்தெடுக்கும் நடைமுறையையே பின்பற்ற வேண்டும்
என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அக் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில்
உள்ளாட்சித் தோதல் தேதி அறிவிக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு
தெரிவித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படாத தோதல், இந்த
முறையாவது நடத்தப்படுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
எனவே, உள்ளாட்சித் தோதல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்.
மேலும்,
உள்ளாட்சித் தோதலில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என
நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவா் பதவிகளுக்கு வாக்காளா்கள்
நேரடியாக தோவு செய்வதற்கு மாறாக மறைமுகத் தோதல் நடத்த அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது.
இது கண்டனத்துக்குரியது.
அனைத்துப் பதவிகளும் ஜனநாயக முறைப்படி வாக்காளா்களால் தோந்தெடுக்கும் நடைமுறையையே பின்பற்ற வேண்டும்.
மேலும்
சொத்து வரி உயா்வை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது
தோதல் ஆதாயக் கண்ணோட்டத்துடன் அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அப்படி
இல்லையெனில், வரி உயா்வு முழுமையாக ரத்து செய்யவேண்டும் எனத்
தெரிவித்துள்ளாா்.
No comments:
Post a Comment