கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆந்திரத்தில் நான்குமுனைப் போட்டி
நடந்தது.இதில் அசைக்க முடியாத் பலத்துடன் ஆட்சியைப் பிடித்தார் ஜெகன் மோகன்
ரெட்டி.தன் பெயருக்குப் பின்னால் ஜாதி ஒட்டு வேண்டாம். மதுக்கடைகளை
மூடப்போகிறேன் என்று அவரது அதிரடியான அறிவிப்புகள் மக்களிடையே பெரும்
வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இதனால்,ஜெகன் மோகனை எதிர்க்க மத
பிரச்சினைகளை கையில் எடுக்கிறது ஆந்திர பிஜேபி. ஆந்திரமுதல்வர் சமீபத்தில்
ஜெருசலேம் சென்று வந்த செய்திகள் வெளிவந்த உடன் நடிகர் பவன் கல்யாண்
தலைமையிலான ஜனசேனா கட்சியினர் ஒரு கேள்வியை எழுப்பினர்.
திருப்பதி
ஏழுமலையான் கோவிலுக்கு போக விரும்பும் இந்துக்கள் அல்லாதவர்கள், அங்குள்ள
தேவஸ்தானப் பதிவேட்டில் ' எனக்கு ஏழுமலையான் மீது நம்பிக்கை இருக்கிறது'
என்று எழுதிக் கையெழுத்து இடவேண்டும் எனபது விதி.முதல்வராகப் பதவி ஏற்ற
பிறகு ஜெகன் மோகன் திருப்பதிக்கு இரண்டுமுறை வந்திருக்கிறார்.ஆனால்,அந்தப்
பதிவேட்டில் கையெழுத்து இடவில்லை.
ஜெருசலத்துக்குப் போய் பிரார்த்தனை செய்துவிட்டு
வந்த முதல்வர் ஏன் அந்தப் பதிவேட்டில் கையெழுத்து இடவில்லை என்பது
ஜனசேனாவின் கேள்வி.இதற்கு பதிலளிக்கும் விதமாக , ' திருப்பதி தேவஸ்தானம்
ஆந்திராவில்தானே இருக்கிறது?. அங்கே போக முதல்வருக்கு அனுமதி தேவையா' என்று
அமைச்சர் கோடாலி நானி கேட்டார்.
இதைத்
தொடர்ந்து, திருப்பதி தேவஸ்தானத்தை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர்
கோடாலி நானியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பிஜேபியின் மாநில
செயலாளர் பானுப்பிரகாஷ் ரெட்டி திருப்பதி போலீசில் புகார்
அளித்திருக்கிறார்.
இவரைத் தொடர்ந்து,ஆந்திர மாநில பிராமண சங்கத்
தலைவர் வேமூரி அனந்த சூர்யாவும் களத்தில் குதித்திருக்கிறார்.அவர்
விஜயவாடாவில். உள்ள சூரியபேட்டா காவல் நிலையத்துக்கு பல்வேறு இந்து
அமைப்புகளை அழைத்து வந்தார்.அனைவரும் இதுகுறித்து புகார் அளித்து
இருக்கின்றனர்.
இருக்கும் 21 எம்.எல்.ஏக்களும் ஜெகன் மோகன் பக்கமோ,பிஜேபிக்கோ போய்விடக்கூடாது என்கிற அச்சத்தில் இருப்பதால் சந்திரபாபு நாயுடு இது குறித்து அமைதி காத்து வருகிறார்.
இருக்கும் 21 எம்.எல்.ஏக்களும் ஜெகன் மோகன் பக்கமோ,பிஜேபிக்கோ போய்விடக்கூடாது என்கிற அச்சத்தில் இருப்பதால் சந்திரபாபு நாயுடு இது குறித்து அமைதி காத்து வருகிறார்.
No comments:
Post a Comment