தமிழகத்தில் நிறைய காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகளை தொடர்ந்து
தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தற்பொழுது நேரடி நியமனம் மூலமாக 1,141 காலி
பணியிடங்களுக்காக கால்நடை உதவி மருந்துவர் பணிக்கும், தற்காலிக
அடிப்படையில் 636 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு ஒன்றை
வெளியிட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு
தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பதாரர்கள் ஆன்லைன்
மூலமாக விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி
தெரிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கான சம்பள விகிதம் மாதம் ரூ.55,500 -
1,75,700 வரையிலும், பணியிடம் தமிழ்நாட்டிற்குள் இருக்கும் என்றும்
தெரிவித்துள்ளது.
இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் கால்நடை மருத்துவத்
துறையில் பி.வி.எஸ்சி., முடித்திருக்க வேண்டும் என்றும், எழுத்துத் தேர்வு
மற்றும் நேர்முகத் தேர்வு வடிவத்திலான வாய்வழி சோதனை அடிப்படையில் இந்த
காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும்
தெரிவித்துள்ளது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள், www.tnpsc.gov.in,
www.tnpscexams.net, www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின்
மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பதிவு கட்டணமாக ரூ.150, விண்ணப்ப
கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
எழுத்து தேர்வுகள் தமிழகத்தில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி,
திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர் போன்ற இடங்களில் வரும் பிப்ரவரி மாதம் 23ம்
தேதி நடைப்பெறும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.12.2019 .
No comments:
Post a Comment