அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அதிரை TIYA வின் புதிய நிர்வாகிகள் தேர்வு 18.10.2019 வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பின் தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் சிறப்புற நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.
TIYA வின் நிர்வாகிகள் தேர்வுக்கு தாஜுல் இஸ்லாம் சங்க தலைவர் M.M.S. சேக் நஸ்ருதீன் அவர்கள் அமீராக இருந்து சிறப்பாக நடத்தினார்கள்
நடைபெற்ற இந்தப் பொதுக்குழுவில் சகோதரர் N.முகமது மாலிக் அவர்களின் கிராஅத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து சகோதரர் H. சபீர் அவர்கள் வரவேற்புரை மற்று
ஷுராவின் ஒழுக்கங்கள் குறித்தும் வாசித்தார்.
TIYA வின் சேவை குறித்து அபுதாபி தமிழ் சங்க முன்னாள் தலைவர் சகோதரர் காதர் முகைதீன் காக்கா அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார்கள்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், கடந்த 2005 முதல் 2019 அக்டோபர் வரையில் TIYA ஆற்றியுள்ள சேவைகள் குறித்து சகோதரர் N. முகமது மாலிக் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார். இனி தொடரவுள்ள சேவைகள் என அனைத்தும் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டது.
இப்பெரும் சேவைகளை துடிப்புடன் செய்து வந்த அமீரக நிர்வாகிகள் மற்றும் தாயகத்தின் TIYA நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவு கூறப்பட்டனர்.
P.M.K. தாஜிதீன், K.M.S. நிஜாம் (மீடியா மேஜிக்) ஆகியோர் தேர்வுக்குழு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டு கீழ்கண்ட புதிய நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்கள்.
தலைவர் : I. மக்ஸின்
துணைத் தலைவர் : H. பெரோஸ்
செயலாளர் : H. சபீர் அகமது
துணைச் செயலாளர் : K. அப்ரீத்
பொருளாளர் : K.K. அஸாருதீன்
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பின்னர் கூடி இணைச் செயலாளர் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.
நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் நமது முஹல்லாவாசிகள் ஏராளமானோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
என்றும் அன்புடன்
TIYA நிர்வாகம்
No comments:
Post a Comment