
திமுக., பொருளாளர் துரை முருகன் பொருள் பொதிந்த வகையில் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுங்கள் என்று சொல்லி, ஆரவாரம் ஓய்ந்துவிடாத நிலையில், இப்போது ஆரவாரத்தைக் கூட்டியிருக்கிறார் அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின்!
தாம் ரஷ்யா சென்ற போது, ஸ்டாலின் என்ற தனது பெயரால் சில சங்கடங்கள் ஏற்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை அண்ணாநகரில் நடந்த திருமண விழாவில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் பேசியபோது, திமுக ஆட்சியில் முதலீட்டாளர்களை ஈர்க்க வெளிநாடு செல்லவில்லை. மெட்ரோ திட்டம், ராமநாதபுரம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவற்றிற்கு நிதி திரட்டத் தான் சென்றோம். 2 உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது..?
ஸ்டாலின் என்ற பெயர் தமிழ்ப் பெயராக இல்லாததால் பல சங்கடங்களை உணர்ந்தேன். நான் ரஷ்யா சென்ற போது எனது பெயரால் சில சங்கடங்கள் ஏற்பட்டது. குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுங்கள் என்று ஸ்டாலின் அறிவுரை கூறினார்.
மு.க.ஸ்டாலினின் இந்தப் பேச்சு இப்போது சமூகத் தளங்களில் பெரும் விமர்சனங்களை அள்ளிக் குவித்து வருகிறது. டிவிட்டர் பதிவுகளில் அதிகம் பேர் இதனை டிவிட் செய்து வருகின்றனர்.
தமிழ் பெயரை வெச்ச உடனேயே காப்பாத்திடலாம். இதெல்லாம் மொழியை வைத்து மறைமுகமாக அரசியல் செய்வது. இதை இசுலாமியா, கிறித்தவர்களிடம் சொல்லமாட்டான் இந்த சில்லறை @mkstalinQuote Tweet
இதோ….. செஞ்சிட்டோம்…. பேரைத்தானே மாத்தனும்…..
கருணாநிதி - இரக்கப்பணம்
உதயநிதி - எழுச்சிப்பணம்
இன்பநிதி - மகிழ்ச்சிப்பணம்
ஆதித்யா - ஞாயிறான்
தன்மயா - வடசொல் அல்ல. ஒருவேளை தன்மயம் என்றால் - தனித்தல் / தன்னில் மூழ்கடித்தல்… யப்பா… முடில்லை… ஆனால் சுடலைக்கு?
காலையில் தமிழ் மொழிக்காக போராடும் இயக்கம் திமுக - சுடலை
மாலையில் மணிமேகலையை எழுதியது கீர்த்தனார் -சுடலை
அடேய் நீ தமிழுக்காக போராடலடா தமிழ் தான்டா உன்கிட்ட மாட்டிக்கிட்டு போராடுதுடா சுடலை.

No comments:
Post a Comment