Latest News

`கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் உண்மை ஜெயிக்கும்... காத்திருக்கிறேன்!' - பிரகாஷ் ராஜ் உருக்கம்

கன்னட வார இதழான 'லங்கேஷ்' பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் கௌரி லங்கேஷ். ஹிந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல்கொடுத்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி பசவன் குடியில் உள்ள லங்கேஷ் பத்திரிகை அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் சென்றார். வீட்டில் இருந்தபோது, இரண்டு மர்ம நபர்களால் கெளரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கௌரி லங்கேஷ்
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கௌரி லங்கேஷின் மார்பு, கழுத்து, வயிறு ஆகிய பகுதிகளில் குண்டு பாய்ந்திருந்தது. கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கல்புர்கி போன்றோர் படுகொலை செய்யப்பட்டதைப்போலவே கௌரி லங்கேஷும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

தபோல்கர், கல்புர்கியைச் சுட்டுக்கொன்றது போன்றே அதே துப்பாக்கியில் கௌரி லங்கேஷும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பதைச் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்தனர். பல மாதங்கள் நடந்த விசாரணையையடுத்து, கௌரி லங்கேஷ் வழக்கில் பரசுராம் வாக்மோர், பிரவீன்குமார், நவீன்குமார் உள்ளிட்ட 6 பேரைக் கைதுசெய்தது காவல்துறை.
பிரகாஷ் ராஜ்கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் உண்மை ஜெயிக்கும்... காத்திருக்கிறேன்.

கெளரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டு, இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவடைகிறது. ஆனால், அவரது மரணத்துக்குக் காரணமானவர்கள் இதுவரை தண்டிக்கப்படவில்லை என தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டுவருகிறது.

கெளரி லங்கேஷ் நண்பரும் நடிகருமான பிரகாஷ் ராஜ் இந்தக் கொலை குறித்து நம்மிடம் கூறுகையில், ``கெளரியின் கொலைக்குக் காரணம் தெரியும். இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என எல்லோருக்கும் தெரியும். கொலையாளிகளைக் காப்பாற்றி வருவதும் அவர்கள்தான். ஆனால், உண்மை ஒருநாள் வெளிவரும். நீதி வென்றே தீரும்.
prakashraj
தபோல்கர், கல்புர்கி போலவே கெளரியும் கொல்லப்பட்டிருக்கிறார். மக்கள் விழிப்படைய வேண்டிய காலகட்டம் இது. இவர்களால் இன்னொரு கெளரி கொலையாகாமல் நாம்தான் போராட வேண்டும்'' எனஉருக்கமாகத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.