
சேலத்தில் தங்கி மசாஜ் சென்டரில் பணியாற்றி வந்த மிசோரம் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தை அடுத்து,மசாஜ் சென்டர் பெண்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலத்தில்தி ராயல் ஹெல்த் ஸ்பா என்ற மசாஜ் சென்டரில்மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அதே தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வசித்து வருகிறார்கள்.நேற்று இரவு அனைவரும் சாப்பிட்டு உறங்கினர். அப்போது மிஜோ ராமை சேர்ந்த எஸ்தர் (வயது 28) என்ற இளம்பெண் கடைக்குச் சென்று இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் வாங்கி வந்தார்.பின்னர் அதை சமைத்து சாப்பிட்டார். பிறகு அவர் பக்காடி ரம் குடித்துள்ளார் பின்னர் படுத்து தூங்கிவிட்டார்.
இன்று காலை அனைவரும் எழுந்து பார்த்தபோது எஸ்தர் மட்டும் எழாமல் அப்படியே படுத்து இருந்தார்.இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற பெண்கள் அவரை எழுப்பினர். ஆனால் எஸ்தர் எழவில்லை.பின்னர் அவரை தட்டி பார்த்தனர். ஆனால் எஸ்தர் இறந்து இருப்பது தெரியவந்தது இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கள் மசாஜ் சென்டர் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அவர் விரைந்து வந்து எஸ்தரின் உடலை பார்த்து பிறகு இதுகுறித்து அழகாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.உடனே காவல் ஆய்வாளர் செந்தில் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் காவலர்கள் உடனே விரைந்து வந்து சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எஸ்தர் இறந்தது குறித்து மிசோரம் மாநிலத்தில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.எஸ்தர் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிட்டதால் இறந்தாரா அல்லது பக்காடி ரம் அதிகம் குடித்ததால் இறந்தாரா என தற்போது விசாரணை நடந்து வருகிறது.
எஸ்தர் அறையில் இருந்த இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பாக்கெட் மற்றும் பக்காடி ரம் பாட்டிலையும் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.
எஸ்தர் சாவு குறித்து அவருடன் பணியாற்றி வந்த நான்கு மிசோரம் பெண்களை பிடித்து தற்போது அழகாபுரம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in
No comments:
Post a Comment