
நிஜாமாபாத்: 'டேம்'க்கு உள்ளே டான்ஸ் ஆடி டிக்டாக் வீடியோ எடுத்த இளைஞரை.. அப்படியே வெள்ளம் அடித்து கொண்டு சென்றுவிட்டது.
நீதிமன்றம் வேண்டாம், வேண்டாம் என்று சொல்லியும், விவாதம் செய்து டிக் டாக் எங்களுக்கு வேண்டும் என்று கேட்டு.. அதை இப்போது நடைமுறைக்கும் கொண்டு வந்துவிட்டனர்.
இப்போது, இந்த டிக்டாக் மோகத்தினால் திறமைகள் வெளிப்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், இதன்மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு யாராலும் ஒரு பதிலும் சொல்ல முடியவில்லை.

அணை
அப்படித்தான், தெலுங்கானாவில் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. நிஜாமாபாத் பீம்கல் மண்டலம் கோனூகொப்புலா என்ற கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். இவர் தனது 2 நண்பர்களுடன், போன வெள்ளிக்கிழமை கப்பலவாகு தடுப்பணை பகுதிக்கு மீன்பிடிக்க சென்றார். பிறகு அந்த அணையிலேயே நண்பர்களுடன் சேர்ந்து குளித்து கொண்டிருந்தார்.

வீடியோ
குளித்து கொண்டிருந்தவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, திடீரென டிக்டாக்கில் வீடியோ செய்யலாம் என்று முடிவெடுத்தனர். அதற்கு தினேஷ் நான் டான்ஸ் ஆடுகிறேன், நீங்கள் வீடியோ எடுங்கள் என்று சொன்னார். அதன்படியே அணையில் தினேஷ் டான்ஸ் ஆட, நண்பர்கள் 2 பேரும் இதை வீடியோ எடுத்தனர்.

வெள்ளப்பெருக்கு
ஒரு கட்டத்தில் நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்த பாலச்சந்திரன் நெய்வேலி டவுன் போலீசுக்கு போன் செய்யவும், தலைமை காவலர் சங்கர், போலீஸ்காரர் ராஜியும் வந்தனர். அவர்களும் மணிகண்டனிடம் பேச்சு தந்தனர். கடைசியில் வேறு வழியே இல்லை என்று உணர்ந்த பாலசந்திரன், மணிகண்டனின் 2 வயது குழந்தையை தூக்கி கொண்டு வந்தார்.

2 பேர்
இதை பார்த்த, கரையோர பகுதி கிராம மக்கள் ஓடிவந்து அணைக்குள் குதித்து 3 பேரையும் மீட்ட முயன்றனர். ஆனால், 2 நண்பர்களையும் காப்பாற்றிவிட்ட நிலையில், தினேஷை மட்டும் காப்பாற்ற முடியவில்லை. ஏனென்றால், அவர்தான் தடுப்பணையின் நடுப்பகுதியில் நின்றுகொண்டு டான்ஸ் ஆடி கொண்டிருந்தார். அதனால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் முதலில் அடித்து கொண்டு போனது தினேஷ்தான்.

வைரல் டான்ஸ்
இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப்படையினருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து தினேஷை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். 2 நாளாக கடுமையாக முயற்சி செய்து தேடி பார்த்து, கடைசியில் 3-வது நாளாக இன்று காலைதான் அவரது உடலை மீட்டனர். இறப்பதற்கு ஒருசில நிமிடங்களக்கு முன்பு தினேஷ் ஆடிய இந்த டான்ஸ்தான் வைரலாகி வருகிறது.
No comments:
Post a Comment