
புதுடெல்லி: தேங்கியுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டி உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 30 லிருந்து 34 ஆக உயர்த்தி மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இந்த புதிய பதவிகளுக்கான பெயர்களை சமீபத்தில் 'கொலீஜியம்' பரிந்துரைத்தது.அதன்படி கிருஷ்ணா முராரி, எஸ்.ரவிந்திர பட், வி.ராமசுப்பிரமணியன், ரிஷிகேஷ் ராய் ஆகிய நான்கு பேர் சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதிகளாக நியமிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.இவர்கள் இன்று பதவி ஏற்றனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இதன்மூலம் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகளின் எண்ணிக்கை 30 லிருந்து 34 ஆக உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment