
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தாய்நூயான், டுயான் குயங் உள்ளிட்ட மாகாணங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர், 75 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், வெள்ளத்தில் சிக்கி ஒருவர் மாயமாகியுள்ளதாகவும் அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment