Latest News

உத்தரகாண்ட் மாநிலம் நிவாரணப் பொருட்கள் கொண்டு சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது

உத்தரகாசி:
தொடர் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உத்தரகாசி மாவட்டம் மோரி பகுதியில் இன்று காலை மோல்டி பகுதிக்கு ஹெலிகாப்டரில் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. அந்த ஹெலிகாப்டர் மோல்டியை நெருங்கியபோது மோசமான வானிலை காரணமாக விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த ஹெலிகாப்டரில் பைலட், துணை பைலட் மற்றும் ஒருவர் பயணம் செய்துள்ளனர். .

ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தபோது விழுந்திருப்பதால் அதில் பயணித்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என பேரிடர் மேலாண்மை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மோரி பகுதியில் மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலரைக் காணவில்லை. அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.