
பட்டியலின சமூகத்தினர் அப்பகுதியிலுள்ள சுடுகாட்டை ஆக்கிரமித்து வைத்திருப்பது வாணியம்பாடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி என்னும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகே நாராயணபுரம் காலனி அமைந்துள்ளது. இப்பகுதியில் சுடுகாட்டிற்கென எத்தகைய வசதியுமில்லை. இந்த காலனியில் பெரும்பாலும் பட்டியல் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்னர் பாலாற்றில் பாலம் கட்டப்பட்டது.
இறந்துபோகும் சடலங்களை சிரமப்பட்டு பாலத்தை கடந்து சுடு காட்டிற்கு சென்று இறுதி சடங்கை செய்தனர். மேலும், பாலத்தை சுற்றி குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை சேர்ந்த பலர் விளை நிலங்களை வாங்கியுள்ளனர். அவர்கள் தங்கள் வயல்வெளிகளில் பட்டியலின சமூகத்தினரை வரவிடாமல் இருப்பதற்காக வேலியை கட்டியுள்ளனர்.
சமீபத்தில், பட்டியலினத்தை சேர்ந்த குப்பன் என்ற 55 வயது முதியவர் ஒருவர் இறந்து போயுள்ளார். அவருடைய உடலை சுடுகாட்டில் எரிப்பதற்காக பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் விளைநிலங்களின் உரிமையாளர்களிடம் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் அனுமதி தரவில்லை.
இதனால் மனம் உடைந்த பட்டியலின மக்கள் சடலத்தை 20 அடி உயரமான பாலத்திலிருந்து கீழே இறக்கி மிகவும் சிரமப்பட்டு தகனம் செய்தனர். இந்த நிகழ்வானது வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை கண்ட பலர் பட்டியலின மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

No comments:
Post a Comment