
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் தன் தந்தை ப.சிதம்பரத்தின் உதவியுடன் மகன் கார்த்தி சிதம்பரம் ரூ.305 கோடி முறைகேடு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐயும் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
Chidambaram Arrest
இதே வழக்கில் கடந்த வருடம் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தற்போது அதே விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி அவரை கைது செய்திருக்கிறது சி.பி.ஐ.
இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான இந்திராணி முகர்ஜி, ப.சிதம்பரத்துக்கு எதிராகத் தற்போது, அரசுத்தரப்பிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், ''என்னுடைய கணவர் பீட்டர் முகர்ஜி, ப.சிதம்பரத்தை டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது எங்களுடைய ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் அதற்கான விண்ணப்பத்தையும் அவரிடம் கொடுத்துவந்தார்.
கார்த்தி சிதம்பரம்
அதையடுத்து, கார்த்தி சிதம்பரத்தின் தொழிலுக்கு உதவ வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். அதற்கடுத்த சில நாள்களில் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்துப்பேசினோம். அப்போது, ஒரு மில்லியன் யூ.எஸ் டாலரை வெளிநாட்டு வங்கிக் கணக்குக்கு அனுப்பச் சொன்னார்.
ஆனால், அதை செய்ய முடியாது என்று பீட்டர் கூறியதும், இரண்டு கம்பெனிகளின் பெயரைக்கூறி, அவர்களுக்கு பணத்தை அனுப்பச் சொன்னார். இந்தப் பணப் பரிவர்த்தனை விஷயங்கள் பீட்டர் முகர்ஜிக்கு மட்டும் தான் தெரியும். எவ்வளவு பணம் கொடுத்தார் என்று எனக்குத் தெரியாது'' என்று இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்திராணி முகர்ஜி
இந்திராணி முகர்ஜியின் மகளை கொலை செய்த குற்றத்துக்காக, இந்திராணி முகர்ஜியும் அவரின் கணவர் பீட்டர் முகர்ஜியும் தற்போது சிறையில் உள்ளனர். சிறையில் இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் சி.பி.ஐ சிதம்பரத்தைத் தற்போது கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.




No comments:
Post a Comment