
உத்திரப்பிரதேச மாநிலத்தில் கட்டிய மனைவியை சூதாட்டத்தில் வைத்து கணவர் விளையாடி தோற்றதை அறிந்த மனைவி அதிர்ச்சியடைந்து தன் கணவர் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் விபின்குமார்(30) இவருக்கு சூதாடும் பழக்கம் அதிகமாக இருந்துள்ளது. தன்னிடம் உள்ள பணம் மற்றும் பொருட்களை வைத்து சூதாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் இவருக்கும் லீலாவதி(25) என்ற பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் லீலாவதி தற்போது கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் பெண் வீட்டாரிடமிருந்து கொடுத்த வரதட்சணை போதுமானதாக இல்லை மேலும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர் .
இதனால் லீலாவதி அடிக்கடி தன் தாய் வீட்டிற்கு சென்றுவிடுவார் . பின்னர் அங்கிருந்து அவர்கள் கேட்கும் பணத்தை வாங்கி வந்தால்தான் கணவர் வீட்டிற்குள் அனுமதித்துள்ளதாக தெரிகிறது .
இந்நிலையில் விபின்குமார் அதிக மதுபோதையில் சூதாடி கொண்டிருந்த நிலையில் அப்போது தன் கர்ப்பமான மனைவி வைத்து சூதாடியுள்ளார் . அதில் தோற்றும் உள்ளார் . வீட்டிற்கு வந்ததும் தன் மனைவியை சூதில் தோற்ற ராஜேஷ் என்பவரின் வீட்டுக்கு செல்லும்படி கூறியுள்ளார் .
இதனால் அதிர்ச்சி அடைந்த லீலாவதி தன் கணவரிடம் சண்டை போட்டுள்ளார் . அதற்கு அவரது கணவர் சூதில் தோற்று விட்டதாகவும் அதனால் ராஜேஷ் என்பவரின் வீட்டிற்கு நீ சென்றுதான் ஆகவேண்டும் என வலுக்கட்டாயமாக தெரிவித்துள்ளார் . இதனால் அதிர்ச்சி அடைந்த லீலாவதி இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .
புகாரை விசாரித்த காவல்துறையினர் விபின்குமாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர் . அங்கே அவரிடம் விசாரணை நடத்திய போது அதற்கு பவிபின்குமார் தான் அவ்வாறு செய்யவில்லை என பதிலளித்துள்ளார் . மற்றும் அவர் மீது வரதட்சணை கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .

No comments:
Post a Comment