Latest News

`எப்படி வேண்டுமானாலும் எதிரொலிக்கலாம்; நான்கு மாநிலங்கள்தான் டார்கெட்!'- எச்சரித்த அமித் ஷா


காஷ்மீர் விவகாரம், முத்தலாக் உள்ளிட்ட பல சட்டத் திருத்தங்களைக் கொண்டுவந்திருக்கிறது பி.ஜே.பி அரசு. இது, மாநிலங்களில் எப்படி வேண்டுமானாலும் எதிரொலிக்கும். தேர்தல் சமயத்தில், நாடாளுமன்ற வெற்றியை நினைத்து வெறும் தன்னம்பிக்கையோடு செயல்படாமல், வெற்றிபெறுவதற்கான யுக்திகள்குறித்தும் யோசிக்க வேண்டும் என்று நான்கு மாநில பி.ஜே.பி தலைவர்களுக்கு அமித் ஷா எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
modi

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி தனிப் பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடித்தது. அமித் ஷா-வின் தேர்தல் யுக்திதான் இந்த வெற்றிக்குக் காரணம் என பேசப்பட்டு வரும் நிலையில், அடுத்து நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தற்போது கவனத்தை செலுத்தியுள்ளார், அமித் ஷா.
மகாராஷ்டிரா, ஜார்கண்ட், டெல்லி மற்றும் ஹரியானா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. நான்கு மாநிலங்களில் வெற்றிபெற்றாக வேண்டும் என்று மாநிலத் தலைமைகளுக்கு உத்தரவிட்டுள்ளது பி.ஜே.பி தலைமை.
அமித்ஷாகாஷ்மீர் விவகாரம், முத்தலாக் சட்டம் எனப் பல சட்டத் திருத்தங்கள் கொண்டுவந்துள்ளோம். இது, எப்படி வேண்டுமானாலும் எதிரொலிக்கலாம்.
இதையடுத்து, அமித் ஷா மற்றும் பி.ஜே.பி தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில், சமீபத்தில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், ''நடந்து முடிந்த நாடாளுமன்ற வெற்றியைப் பார்த்து, எளிதாக மாநிலங்களில் வெற்றிபெறுவோம் என தன்னம்பிக்கையோடு இருக்காதீர்கள்.
காஷ்மீர் விவகாரம், முத்தலாக் சட்டம் எனப் பல சட்டத் திருத்தங்கள் கொண்டுவந்துள்ளோம். இது எப்படி வேண்டுமானாலும் எதிரொலிக்கலாம். மெத்தனமாக இருந்துவிடாமல், வெற்றிபெறுவதற்கான யுக்திகளைக் கையாள வேண்டும்'' என்று அமித் ஷா மாநிலத் தலைமைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மோடி - ராகுல்
1998-க்குப் பிறகு, டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக் கட்டிலில் அமரவில்லை. அதனால், வரவிருக்கும் தேர்தலில் எப்படியாவது டெல்லியில் வெற்றிபெற வேண்டும் என சிறப்பு கவனம் செலுத்தவிருக்கிறாராம் அமித் ஷா.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.