
சென்னை விமான நிலையத்திலிருந்து ரூ.75 கோடி மதிப்பிலான போதைப் பொருளைகடத்த முயற்சி செய்த நபர் விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கு 105 கிலோ எடையுடைய போதைப்பொருளை கடத்த முயற்சி நடந்துள்ளது. சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இதுகுறித்த தகவல் கிடைத்ததை அடுத்து, அவர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்குரிய நபரிடம் சோதனை செய்ததில் அவரிடம் போதை பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அந்த நபரை கைது செய்தஅதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போதைப் பொருளின் மதிப்பு ரூ.75 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
newstm.in
No comments:
Post a Comment