'

ப. சிதம்பரம் எங்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. ஆகவே, சிபிஐ காவலுக்கு மேலும் 5 நாள் நீட்டிப்பு தர வேண்டும்.' என்று சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் சிபிஐ வாதிடப் பட்டுள்ளது.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வாய் திறக்க மறுத்துவருவதாக சிபிஐ கூறியதால், அவருக்கான சிபிஐ., காவல் வரும் ஆக.30ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது!
சிதம்பரம் பெயரில் வெளிநாட்டில் இருக்கும் ஒரு சொத்தை காட்டினால், ஜாமின் வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என சிதம்பரம் தரப்பு வழக்கறிஞரான கபில்சிபல் சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டனர். தொடர்ந்து அவரது சி.பி.ஐ., காவலை வரும் 30ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணையின் போது சிதம்பரம் மற்றும் அவரது பினாமிகள் பெயரில் அர்ஜென்டினா, ஆஸ்திரியா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், பிரான்ஸ், கிரீஸ், மலேசியா, மனோகா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் வங்கிக் கணக்குகளும், சொத்துக்களும் உள்ளதாக நிதித்துறை புலனாய்வு அமைப்பிடம் இருந்து தகவல் கிடைத்தள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சிதம்பரம் பினாமி பெயர்களில் 17 வங்கிக் கணக்குகளும், 10 விலையுயர்ந்த சொத்துக்களும் உள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியது. இதற்கு பதிலளித்த, சிதம்பரம் தரப்பு வழக்குரைஞர்கள் கபில்சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர், தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி செய்த அன்றே உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டு விட்டது. எனவே, அந்த வழக்கு காலாவதி ஆகவில்லை. அவரது முன்ஜாமின் மீதான மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளன.
மேலும், சிதம்பரத்துக்கு எதிராக ஆவணங்கள் எதையும் அமலாக்கத்துறை அளிக்கவில்லை. அவர்கள் ஊடகன்களிடம்தான் ஆதாரங்களை அளித்துள்ளனர். இப்போது நடப்பது நீதிமன்ற விசாரணை அல்ல, ஊடகங்களின் விசாரணைதான் நடக்கிறது.
சிதம்பரம் பெயரில் வெளிநாட்டில் இருக்கும் ஒரே ஒரு வங்கிக் கணக்கு அல்லது சொத்துக்கான விவரங்களை நீதிமன்றத்தில் அளித்தால் நாங்கள் ஜாமின் மனுவை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்.
கடந்த 5 நாட்களாக சிதம்பரத்திடம் சிபிஐ எந்த விசாரணையும் நடத்தவில்லை. வெறுமனே அவரிடம் டுவிட்டர் கணக்கு உள்ளதா என்று மட்டுமே கேட்கப்பட்டுள்ளது என வாதிட்டனர்.
ஆனால், 'ப. சிதம்பரம் எங்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. ஆகவே, சிபிஐ காவலுக்கு மேலும் 5 நாள் நீட்டிப்பு தர வேண்டும்.' என்று சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் சிபிஐ வாதிடப் பட்டுள்ளது.
தொடர்ந்து சிதம்பரத்தை மேலும் 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவரம் மீண்டும் 30 ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்.
No comments:
Post a Comment