
உத்தரப்பிரதேச மாநிலம், பதாவுன் மாவட்டத்தில் மகளிருக்கென தனி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையில், நோய்வாய்ப்பட்டுப் பிறக்கும் குழந்தைகளுக்கான பராமரிப்புப் பிரிவில் (Sick Newborn Care Unit), கடந்த 50 நாள்களில் மட்டும் 32 குழந்தைகள் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கின்றனர். `குழந்தைகளுக்கு போதிய அளவு ஆக்ஸிஜன் செலுத்தப்படவில்லை. மருத்துவமனையின் அலட்சியமான சிகிச்சைதான் குழந்தைகள் மரணத்துக்குக் காரணம்' எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.
குழந்தை
ஆனால், `குழந்தைகள் இறப்புக்கு மருத்துவமனை நிர்வாகம் மட்டுமே காரணமல்ல'' என மருத்துவமனை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து, அந்த மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ரேகா ராணி பேசும்போது, ``கடந்த மாதத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிட மிக அதிகம். அதில் பல குழந்தைகள் முக்கிய உறுப்புகள் செயலிழந்த நிலையில்தான் அனுமதிக்கப்பட்டனர். அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் இறந்தும் போயினர். இருப்பினும் ஒருசில குழந்தைகளைச் சிகிச்சையின் மூலம் காப்பாற்றியிருக்கிறோம்.
நாடு சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அடிப்படை மருத்துவ வசதிகள் இன்றி பிஞ்சுக் குழந்தைகளின் உயிர்கள் பறிபோவது பல்வேறு கேள்விகளை மனதில் எழச் செய்கிறது. இதற்கெல்லாம் விடிவு எப்போது?
கடந்த 50 நாள்களில் 32 குழந்தைகள் இறந்தது உண்மைதான். ஆனால், அவர்களில் பலர் பிற மருத்துவமனைகளில் இருந்து இங்கே பரிந்துரைக்கப்பட்டவர்கள். அவர்கள் வரும்போதே நோய்த்தொற்றுடன்தான் வந்தார்கள். அதனால் குழந்தைகள் இறப்புக்கு எங்கள் மருத்துவமனை மட்டுமே காரணம் எனச் சொல்லமுடியாது. மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை இருப்பதாகச் சொல்லப்படுவது தவறான தகவல்.
குழந்தை
எங்கள் மருத்துவமனையில் தடையில்லா மின்சார வசதி இருக்கிறது. 24 மணி நேரமும் ஆக்ஸிஜன் வழங்கியும் வருகிறோம். அதேசமயம், மருத்துவமனையில் குறைவான அளவில் சூடேற்றிகள் (Warmer) இருந்தது எங்களுக்குச் சிக்கலாக அமைந்தது. அதனால், ஒரு சூடேற்றியை இரண்டு, மூன்று குழந்தைகள் பகிரும் நிலை ஏற்பட்டது'' என்கிறார் மருத்துவர் ரேகா ராணி.
நாடு சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அடிப்படை மருத்துவ வசதிகள் இன்றி பிஞ்சுக் குழந்தைகளின் உயிர்கள் பறிபோவது பல்வேறு கேள்விகளை மனதில் எழச் செய்கிறது. இதற்கெல்லாம் விடிவு எப்போது?

No comments:
Post a Comment