இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மீது தீராத
காதல் உண்டு. ஐபோனின் அதீத விலையால் 100இல் 90பேர் இதனை வாங்க யோசிப்பது
மட்டும் அல்லாமல் தயங்குகின்றனர். ஆனால் நவம்பர் 8ஆம் தேதிக்குப் பின் இந்த
நிலை முழுமையாக மாறிவிட்டது.
ஆம், பிரதமர் நரேந்திர மோடி நவ.8 தேதியன்று இனி இந்தியாவில் 500 மற்றும்
1000 ரூபாய் செல்லாது என அறிவித்த முதல், ஆப்பிள் ஐபோன் விற்பனை வரலாறு
காணாத உச்சத்தை அடைந்துள்ளது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
500 மற்றும் 1000 ரூபாய் தடை
நவம்பர் 8ஆம் தேதி மோடி தனது அறிவிப்பை வெளியிட்ட முதல் இந்தியாவில்
தங்கம், வெள்ளி, கார், விலை உயர்ந்த பொருட்களின் விற்பனை அதிகரித்தது.
காரணம் இந்தியாவில் இருக்கும் கருப்பு பண முதலைகளிடம் இருக்கும் பழைய 500
மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செலவு செய்தாக வேண்டும் என்ற
சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில் ஆடம்பர பொருட்களின் விற்பனை உச்சத்தை
அடைந்தது.
இதில் ஐபோனும் விதிவிலக்கல்ல.
முன்தேதியிட்ட ரசீது
நவம்பர் 8ஆம் தேதி அறிவிப்புகள் வெளியான நிலையில் நவம்பர் 9 முதல் 11ஆம்
தேதி வரையிலான 3 நாட்களில் இந்தியாவில் ஐபோன் விற்பனை 1 லட்சத்தைத்
தாண்டியுள்ளது.
எப்படி என்றால் மொபைல் கடைகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு முன்தேதியிட்ட
ரசீது மூலம் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு ஐபோன்களை
விற்பனை செய்துள்ளனர்.
பிற பொருட்கள்
ஐபோனை போலவே இந்தியாவில் பிற ஆடம்பர பொருட்களை மக்கள் அதிகளவில் வாங்கிக்
குவித்தனர். இதில் தங்கத்திற்கு முதல் இடம்.
நவம்பர் 8ஆம் தேதிக்குப் பின் டெல்லி, மும்பை, சென்னை போன்ற முக்கிய
நகரங்களில் தங்கம் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக
டெல்லியில் பல நகைக்கடைகள் சந்தை விலைக்கும் அதிகமான தொகைக்கு ரசீது
இல்லாமல் நகைகளை விற்பனை செய்துள்ளது வருவாய் துறை அதிகாரிகளின் சோதனையில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த சனிக்கிழமை வரை சுமார் 16 நாட்கள் டெல்லியில் நகை கடைகள்
மூடப்பட்டுள்ளது.
டெல்லி
500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை அறிவிப்பு வெளியான அடுத்தச் சில
நாட்களில் பல மொபைல் கடைகளில் ஐபோன் முழுமையாக விற்றுத்தீர்ந்தது என டெல்லி
மொபைல் விற்பனை கடை உரிமையாளர் கூறினார்.
ஹெட்செட்
மேலும் ஐபோனுக்கு இணையாக விலை உயர்ந்த ஹெட்செட் அதிகளவில் விற்பனை
செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடத்தை முழுமையாக ஒப்பிட்டாலும் இந்த
இக்காலகட்டத்தில் 30 சதவீதம் அதிகளவிலான ஹெட்செட்கள் விற்பனை
செய்யப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் விற்பனை
அக்டோபர் - நவம்பர் காலகட்டத்தில் இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன் விற்பனை
10 சதவீதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆப்பிள் நிறுவனம் 1 மில்லியன் ஐபோன் விற்பனை இலக்கிற்கு மத்திய
அரசின் அறிவிப்புச் சாதகமாக அமைந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் ஆப்பிள்
நிறுவனம் இந்தியாவிற்கு 4 லட்ச ஐபோன்களை விற்பனைக்காக இறக்குமதி
செய்துள்ளது.
இந்த வரும் ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தையில் தனது விற்பனை இலக்கை
எட்டினால் பிரதமர் மோடிக்குத் தான் டிம் குக் நன்றி சொல்ல வேண்டும்.
தங்கம் / வெள்ளி
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
No comments:
Post a Comment