கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே டி.வி. புதூர் கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ரமேஷ் என்பவர் வீட்டுக்குச் செல்லும் குடிநீர் குழாயில் மர்ம நபர்கள் விவசாயத்துக்குப் பயன்படுத்தும் பூச்சி மருந்தை கலந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள குழாய் முழுவதுமாக மருந்து பரவியுள்ளது.
இந்தத் தண்ணீரை குடித்த ரமேஷ் அவரின் மனைவி அஞ்சுகம், மகன்கள் ரெமோ, ரோகிந், மகள் அஞ்சலி மற்றும் கிராமத்தைச் சேர்ந்த சுருதிகா, வீரச்செல்வன், புவனேஸ்வரி உட்பட 15-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் ஆகியோர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு வந்த சுகாதாரத்துறையினர் குடிநீரை ஆய்வு செய்தனர். அப்போது குடிநீரில் பூச்சி மருந்து கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால், குடிநீர் தொட்டியில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. மேலும், கருவேப்பிலங்குறிச்சி போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து, குடிநீர் குழாயில் மருந்து கலந்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.



No comments:
Post a Comment