
கடந்த முறை தமிழக அரசு நடத்திய இலவச நீட் மையங்களால் எந்த பயனும் இல்லை என்பது கண் முன்னே தெரிந்தது.
ஏனென்றால், ஒரே ஒரு மாணவன் மட்டுமே மருத்துவ சீட் கிடைத்து உள்ளே நுழைய முடிந்தது. இந்த நிலையில் இன்று அமைச்சர் செங்கோட்டையன், தமிழகம் முழுவதும் 412 இலவச நீட் பயிற்சி மையங்கள் அடுத்த வாரம் முதல் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில், சாரண சாரணியர் இயக்க தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இலவச நீட் பயிற்சி மையத்தில் சேர 20,000 மாணவர்கள் இதுவரை விண்ணப்பித்துள்ளதாக என தெரிவித்துள்ளார்.
எல்லாம் சரி ரிசல்ட் தானே முக்கியம். கடமைக்காக பயிற்சி மையம் நடத்தாம, இந்த முறையாவது 1000 மாணவர்களை மருத்துவப் படிப்பில் நுழைக்கப் பாருங்க, இல்லைன்னா இதையும் தனியார்கிட்டேயே கொடுத்துட்டு போயிட்டே இருங்க.

No comments:
Post a Comment