Latest News

`பைக்கின் பின்னால் கல்லூரி மாணவி; செல்போனைப் பறித்த வாலிபர்'- சிசிடிவியால் சிக்கிய பின்னணி

சிசிடிவி காட்சி வைரலாகிவருகிறது.
செல்போன் பறிப்பில் கல்லூரி மாணவி
செல்போன் பறிப்பில் கல்லூரி மாணவி
சென்னை வெள்ளாள தேனாம்பேட்டை, பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் திஷேரிங் லேப்சா. இவரின் மனைவி பிரசன்னா லேப்சா (42). இவர் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான், மேற்கண்ட முகவரியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாடகை வீட்டில் குடியிருந்துவருகிறேன். நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள பியூட்டி பார்லரில் வேலைபார்த்து வருகிறேன். நானும், வீட்டின் உரிமையாளர் மகள் ரோஹிணியும் வள்ளுவர்கோட்டத்தில் உள்ள டிரைவிங் ஸ்கூலில் டூவிலர் ஓட்ட பயிற்சி எடுத்துவருகிறோம்.
செல்போனைப் பறிக்க பயன்படுத்தப்பட்ட பைக்
செல்போனைப் பறிக்க பயன்படுத்தப்பட்ட பைக்
கடந்த 12-ம் தேதி டிரைவிங் ஸ்கூலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்துவந்தோம். அப்போது, ஜி.என்.செட்டி சாலையில் உள்ள சன் பிளாசா அருகே நடந்துவந்தபோது பின்னால் பைக்கில் வந்த ஆணும் பெண்ணும் என்னுடைய கைப்பையை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர். அவர்களை விரட்டிச் சென்றும் பிடிக்கமுடியவில்லை. கைப்பையில் செல்போன் இருந்தது. எனவே. செல்போனை மீட்டுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.
இதையடுத்து தேனாம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணை நடத்தினார். சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, பைக்கில் வரும் ஆணும் பெண்ணும் கைப்பையை பறித்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. வண்டியின் பதிவு எண்ணை வைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்களை போலீஸார் கண்டறிந்தனர்.
செல்போன் பறிப்பில் வாலிபரும் கல்லூரி மாணவியும்
செல்போன் பறிப்பில் வாலிபரும் கல்லூரி மாணவியும்
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``செல்போன் பறிப்பு சம்பவத்தில் முதல் முறையாக ஆணுடன் சேர்ந்து இளம்பெண் ஒருவர் ஈடுபட்டுள்ள சம்பவம் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்தோம். அப்போது பின்னால் அமர்ந்திருந்த பெண்ணின் முகம் தெளிவாகத் தெரிந்தது. மேலும், வண்டியின் பதிவு எண் அடிப்படையில் விசாரித்தபோது செல்போனை பறித்தவர்கள் குறித்த தகவல் கிடைத்தது.
செல்போனை பறித்தது சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ராஜூ (23) என்றும் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்தது கரூரைச் சேர்ந்த சுவாதி (20) என்றும் தெரிந்தது. சுவாதி, தாம்பரத்தில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்துவருகிறார். அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளோம். செல்போன் மற்றும் பைக்கை பறிமுதல் செய்துள்ளோம். ராஜூ ஓட்டி வந்த பைக், கிண்டியில் திருடப்பட்டது. ராஜூம் சுவாதியும் நட்சத்திர ஹோட்டலில் சந்தித்துள்ளனர். அதன்பிறகுதான் இருவரும் நட்பாக பழகிவந்துள்ளனர்" என்றார்.
ராஜூ
ராஜூ
சென்னையில் செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்கதையாக நடந்துவருகிறது. இந்தக் குற்றச்சம்பவங்களில் கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள் ஈடுபட்டுவருகின்றனர். முதல் முறையாக இவர்கள் குற்றச் செயலில் ஈடுபடுவதால் அவர்களை நீண்ட நெடிய போராட்டத்துக்குப்பிறகுதான் போலீஸார் பிடித்துவருகின்றனர். செல்போன், செயின் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபடுவோரைப் பிடிக்க போலீஸாருக்குப் பெரிதும் உதவியாக இருப்பது சிசிடிவி கேமராவும் செல்போன் சிக்னலும்தான்.
தேனாம்பேட்டை செல்போன் பறிப்பு சம்பவத்தில் பைக்கின் பின்னால் பெண் அமர்ந்திருக்க, வாலிபர் குற்றச் செயலில் ஈடுபடுகிறார். கைப்பையை பைக் ஓட்டியபடி பறிக்கும் அந்த வாலிபர், பின்னால் அமர்ந்திருக்கும் பெண்ணிடம் அதைக் கொடுக்கிறார். மேலும், செல்போனைப் பறிக்கொடுத்தவர்கள் வண்டியின் நம்பரைத் தெளிவாகக் கூறினர். இதனால்தான் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ராஜூ, பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த சுவாதியைப் பிடிக்க முடிந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
சுவாதி
சுவாதி
ராஜூ, சுவாதி ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது முக்கிய தகவல் ஒன்றை அவர்கள் கூறியுள்ளனர். அதை போலீஸார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர். அதில், ``வீட்டில் இருந்து கல்லூரிக் கட்டணமாக ரூ.30,000 வாங்கி வந்தேன். அதை ஆடம்பரமாக செலவு செய்துவிட்டேன். இதனால்தான் செல்போனைத் திருட ராஜூவுடன் சென்றேன்'' என்று கல்லூரி மாணவி சுவாதி என்று கூறியுள்ளார். சுவாதியின் குடும்பத்தினருக்கு இந்தத் தகவலை போலீஸார் தெரிவித்துள்ளனர். அதைக் கேட்டதும் சுவாதியின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
செல்போன் பறிப்பில் கல்லூரி மாணவி ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.