
புதிய கல்வி கொள்கையில் சூர்யா பேசுவதில் மகிழ்ச்சியும் பெருமையும்தான் அடைய வேண்டும் என நாம் தமிழர்கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, ' மூன்று வயதிலேயே மூன்று மொழிக் கல்வி திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் இதனை எப்படி சமாளிக்கப்போகிறார்கள்..?. எல்லோரும் அமைதியாக இருந்தால், இது திணிக்கப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை மீதான ஆலோசனைகளை, மாற்றங்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், என அனைவருமே ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள்' என கூறியிருந்தார்.
சூர்யாவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.சூர்யாவின் இந்த பேச்சு குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆகியோர் கடுமையாக சாடியிருந்தனர்.
இந்நிலையில், புதிய கல்வி கொள்கையில் சூர்யா பேசுவதில் மகிழ்ச்சியும் பெருமையும்தான் அடைய வேண்டும் என நாம் தமிழர்கட்சியின்
சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், 'இதில் அரசியல் பார்க்கக்கூடாது. இது அடிப்படை உரிமை. நான் பல ஆண்டுகளாக பேசி வந்ததையே சூர்யா பேசியுள்ளார். அவர் பேசுவதில் மகிழ்ச்சியும் பெருமையும்தான் அடைய வேண்டும். அவரின் துறை சார்ந்த பெரிய நடிகர்கள் எல்லாரும் பயந்து கொண்டு இருக்கும்போது சூர்யா தைரியமாக பேசியுள்ளார். கல்வி என்பது மானுட உரிமை. அதை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அவர் கேட்கும் கேள்விகளில் எவ்வளவு நியாயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:
Post a Comment