
டெல்லி மாநில முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் இருதய கோளாறால் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.
டெல்லி மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான ஷீலா தீட்சித்தின் திடீர் மறைவு அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ஷீலா தீட்சித்தின் மறைவிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்
ஷீலா தீட்சித் மறைவு குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் அன்பு மகளாக திகழ்ந்த ஷீலா தீட்சித் அவர்கள் மறைவு பற்றிய செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட முறையில் என்னுடன் நெருக்கமான நல்லுறவுகளை பேணிவந்த அவரது மறைவு மிக பெரிய இழப்பாகும். மேலும் 3 முறை டெல்லி முதல்வராக தன்னலமின்றி பணியாற்றியவர் ஷீலா தீட்சித் என புகழாரம் சூட்டியுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் டெல்லி குடிமக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார் ராகுல்.

No comments:
Post a Comment