
சட்டசபையில் ஸ்டாலின். சட்டையை கிழித்துவிட்டு சென்றதாகவும் முதல்வர் பதவி மேல ஸ்டாலினுக்கு அவ்வளவு வெறி என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி உள்ளார்.
வேலூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேவி குப்பம் பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "543 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் தேர்தல் நின்றது என்றால் அது வேலூர் தொகுதி தான். திமுக வேட்பாளரால் நிறுத்தப்பட்ட தொகுதி இது தான். திமுக தலைவர் ஸ்டாலின் காலையில் ஒரு கூட்டத்தில் பேசுகையில் திட்டமிட்டு வேண்டுமென்ற தேர்தலை நிறுததி இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். நாங்கள் வேண்டுமென்றா தேர்தலை நிறுத்தினோம்.
ஸ்டாலின் பேசுவது பாய்
நீங்கள் மூட்டை மூட்டையாக பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டும் என பதுக்கி வைத்திருந்ததை வருமான வரித்துறை கண்டுபிடித்தது. இதனால் தான் தேர்தல் நிறுத்தப்பட்டது. ஸ்டாலின் அரிச்சந்தர் வீட்டில் பிறந்தவரை போல் உண்மையை பேசுவது போல் பேசுகிறார். ஆனால் அத்தனையையும் மறைத்து பொய் பேசுகிறார்.
இருக்கும் இடத்தில் தான்
அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சண்முகம் வீட்டில் ஏன் சோதனை நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் கேட்கிறார். இருந்தால் தான் சோதனை நடத்த முடியும். இருக்கும் இடத்தில் தான் சோதனை நடத்துவார்கள். வருமான வரித்துறையும் தேர்தல் ஆணையமும் எங்கு புகார் வந்ததோ அங்கு தான் சோதனை நடத்துவார்கள். புகார் வந்தது சோதனை நடத்தினார்கள். பிடிப்பட்டீர்கள், அதனால் தேர்தல் நின்று போனது. இதுதான் நடந்த உண்மை. எங்கள் மீது ஏன் வீண்பழி சுமத்துகிறீர்கள். நாங்கள் காட்டிக்கொடுக்கவில்லை. உங்களுக்குள் யாராவது காட்டிக்கொடுத்திருப்பார்கள்.
ஸ்டாலின் ராசியான் ஆள்
கர்நாடகாவில் நடந்ததை ஸ்டாலின் சுட்டிக்காட்டு பேசுகிறார். கர்நாடகாவில் திமுகவின் கூட்டணியான காங்கிரசின் ஆட்சி தான் நடந்தது. காங்கிரஸ் உடன் ஸ்டாலின் கூட்டணி வச்சதால் அங்கையும் காங்கிரசுக்கு போச்சு. அவ்வளவு ராசியான ஆள் ஸ்டாலின். ஆட்சிக்கு வரமுடியவில்லை. கூட்டணி ஆட்சியும் போய்விட்டது.
வெற்றி பெற்றுவிட்டார்
நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் மத்தியிலும் மாநிலத்திலும் நாங்கள் தான் வருவோம் என ஸ்டாலின் ஊர் ஊராக போய் பேசினார். ஊர் ஊராக ஒரு பொய்யா இரண்டு பொய்யா மூட்டை மூட்டையாக பொய் பேசினார். அதையும் நம்பி மக்கள் வாக்களித்துவிட்டார்கள். பொய்யை பேசி வெற்றி பெற்றுவிட்டார்கள்.
நான் ஒரு விவசாயி
நான் ஒரு விவசாயி, விவசாயி நாட்டை ஆளக்கூடிய தகுதி இல்லையா? விவசாயி இந்தசேரில் உட்கார்ந்தால் சேர் உடைந்தா போய்விடும். விவசாயி கையெழுத்து போட்டால் செல்லாதா.. ஆகவே ஸ்டாலினால் ஒரு விவசாயி முதல்வர் ஆவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
ஆள தகுதியானவர்களா
கர்நாடகா மாதிரி நடக்கும் என்கிறார். எப்படி கர்நாடகா மாதிரி நடக்கும். முயற்சி செய்து பார்த்தீர்கள். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டார். எங்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். அப்போது என்னவெல்லாம் நடந்தது. என்னுடைய மேஜையின் மீதுஏறி திமுக எம்எல்ஏ டான்ஸ் ஆடுகிறார். இவர்கள் எல்லாம் நாட்டை ஆள தகுதியானவர்களா, இவர்களிடம் நாட்டை கொடுத்தால் நாடு உருப்படியாகுமா?
ஸ்டாலினுக்கு வெறி
ஒரு காலமும் இவர்களால் அதிமுக அரசை வீழ்த்த முடியாது. கட்சியை உடைக்க முடியாது ஸ்டாலின் அவர்களே... நீங்கள்போடாதா ஆட்டமா.. புத்தகத்தை வீசி எறிந்தீர்கள். சபாநாயகர் தனபால் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். அவரை சேரில் இருந்து கீழே இழுத்து தள்ளிவிட்டுவிட்டு நாற்காலியில் திமுக எம்எல்ஏக்கள் அமர்ந்த கட்சி இன்னும் என் கண் முன்னே நிற்கிறது. அத்தனையும் செய்துவிட்டு சட்டையை கிழித்து வெளியே சென்றார் ஸ்டாலின். சட்டையை கிழித்துவிட்டு என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள். நீங்களே ஊகம் செய்து கொள்ளுங்கள். முதல்வர் பதவி மேல ஸ்டாலினுக்கு அவ்வளவு வெறி. மக்கள் கொடுத்தால் அருமையாக உட்காரலாம். நாங்கள் யாரையும் உட்கார கூடாது என்று சொல்லவில்லை" இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment