
மற்றவருக்கு சொந்தமான தோப்பில் இருந்து மாங்காய் பறித்த குற்றத்திற்காக 6 பெண்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவமானது தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் கம்பம் என்னும் பகுதி அமைந்துள்ளது. கம்பம்மெட்டு ரோடு பகுதியிலுள்ள புதுக்குளம் ஆலமரத்து சாலையில் கேசவன் என்பவர் சொந்தமாக மாங்காய் தோப்பு வைத்திருக்கிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். தினமும் தன்னுடைய மாங்காய் தோப்பிற்கு சென்றேன் பார்க்கும் வழக்கமுடைய இவர் சம்பவத்தன்றும் அங்கு சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தோப்பினுள் 6 பெண்கள் ஒன்றாக சேர்ந்து மாங்காய்களை திருடிக்கொண்டு இருந்தனர். 6 பேரும் சேர்ந்து கோணிப்பையில் சுமார் 240 கிலோ மதிப்புள்ள மாங்காய்களை மறைத்து வைத்திருந்தனர். கேசவன் தன்னுடைய நண்பர்களை அழைத்து அவர்களை மடக்கி பிடித்துள்ளார். அவர்கள் திருடி வைத்திருந்த மாங்காய்களின் மதிப்பு 10,000 ரூபாயாகும். அவர்களை கம்பம் காவல் நிலையத்தில் கேசவன் ஒப்படைத்தார்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண்கள் முருகேஸ்வரி(35), வனிதா(33), புனிதா(35), மாச்சி(28), சாரதா(47), லட்சுமி(50), ஆகியோர் மாங்காய் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது கம்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment