
கத்தியைக்காட்டி நகையை கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையனை பொதுமக்களின் உதவியுடன் பெண்ணொருவர் மடக்கி பிடித்திருக்கும் சம்பவமானது பூந்தமல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லியை அடுத்துள்ள காட்டுப்பாக்கத்தில் ஓம் சக்தி நகர் என்னும் பகுதியுள்ளது. மூர்த்தி என்பவர் இந்த பகுதியை சேர்ந்தவராவார். இவருடைய மனைவியின் பெயர் தனலட்சுமி. தனலட்சுமி சினிமா துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர் செந்தூர்புரம் மெயின் ரோட்டில் வழக்கமாக மளிகை பொருட்களை வாங்குவார். நேற்றிரவும் அந்த கடைக்கு சென்று மளிகை பொருள் வாங்கி விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் அவர் கழுத்திலிருந்த நகைகளை பறிக்க முயன்றுள்ளார். உடனே சாமர்த்தியமாக செயல்பட்ட தனலட்சுமி கொள்ளையனை மடக்கிப்பிடித்துள்ளார். மாட்டிக்கொண்டு விடுவோம் என்று பயந்த கொள்ளையன் தன்னிடமிருந்த சிறிய கத்தியால் தனலட்சுமியின் கையை கிழித்துள்ளார்.
இருப்பினும் அவரை விட்டுவிடாமல் தனக்கு உதவுமாறு கூச்சலிட்டுள்ளார். இவரின் கூச்சலை கேட்ட பொதுமக்கள் திரண்டு வந்து கொள்ளையனை மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அப்பகுதி காவல் நிலையத்தில் கொள்ளையனை சமர்ப்பித்துள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை நடத்தியது கொள்ளையன் ஐயப்பன்தாங்கலை சேர்ந்த சிவகுமார் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதை கண்டறிந்துள்ளனர். அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது பூந்தமல்லி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment