
சமீபத்தில் ஜூனியர் விகடன் பத்திரிகையில் தி.மு.க.வை, திராவிட முன்னேற்ற கம்பெனி என்று குறிப்பிட்டு,
அதில் உதயநிதி, சபரீசன் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகிய மூவரின் ராஜ்ஜியம்தான் நடக்கிறது என்று குறிப்பிட்டிருந்தனர். அதற்கு உடனே 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு துர்கா ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில், வேலூரில் அ.தி.முக. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாகப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. என்பது முத்திரை இல்லாத கட்சி. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
மேலும் அவர் பேசுகையில், 'கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின் தலைவர், ஸ்டாலினுக்குப் பிறகு அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் தலைவராக இருப்பார். ஏன், தி.மு.க.வில் வேறு ஆளே இல்லையா..?
தி.மு.க. குடும்ப அரசியல் கட்சி. அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் இல்லை. சாதாரண தொண்டரும் உயர்ந்த பதவிக்கு வரக்கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க.தான் என்று பெருமையாகத் தெரிவித்து இருக்கிறார். இதே விஷயத்தைத்தான் அந்தப் பத்திரிகையும் எழுதியிருந்தது.
இதற்காக இப்போது தி.மு.க. முதல்வர் மீது கேஸ் போடுவார்களா அல்லது துடைத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார்களா..?
No comments:
Post a Comment