
கர்நாடகா சபாநாயகர் ரமேஷ்குமார் இன்று காலை 11.30 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
புதிதாக பதவியேற்றுள்ள எடியூரப்பா அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். நிதி மசோதாவையும் நிறைவேற்ற அவசியம் ஏற்பட்டுள்ளது.முன்னாள் மத்திய மந்திரி ஜெய்பால் ரெட்டியின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் என மொத்தம் 14 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் அனைவரும் 2023 மே 15ம் தேதி வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.பா.ஜ.க. அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவுள்ள நிலையில் சபாநாயகர் 14 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment